வாழு வாழவிடு எனும் அமைதி முயற்சிகளை சந்தேகப்படக்கூடாது
அமைதிக்கு வாய்ப்பளிப்போம்!
பாகிஸ்தானில் முன்பிருந்த அரசுகள் அங்கிருந்து வரும் தாக்குதல்களை தடுக்க சிறிதளவே முயற்சிகளை எடுத்தன. காஷ்மீர் பிரச்சனையில் பாகிஸ்தான் எந்த ஒரு நடைமுறைத் தீர்வையும் முன்வைக்கவில்லை. இன்றுவரையிலும் கூட வளைந்து கொடுக்காத தன்மையில் அமைதிப் பேச்சுவார்த்தை செல்கிறது. எதிர்தரப்பில் எந்த பதிலும் இல்லாத நிலையில் நாம் தொடர்ந்து அதனை முன்னெடுத்து வருகிறோம்.
பாகிஸ்தானுடன் விரோதம் வளர்க்க நம்மிடம் பல்வேறு காரணங்கள் இன்றும் உயிரோடு உள்ளன. இது கடினமானதாக இருந்தாலும், அமைதி அழைப்பு என்பது முக்கியமானதாக உள்ளது. ஆண்மையுடன் தொடர்புபடுத்தாத வரையில் வாழ்க்கையில் இது முக்கியமானதுதான். வன்மம் வளர்ப்பதைவிட இந்தியர்களுக்கு நல்ல வாழ்விற்கான உறுதி தருவது அமைதி என்பதால் அதனை தேர்ந்தெடுக்க முடியும்.
பாதுகாப்பு நிதியறிக்கையில் 40 பில்லியன் டாலர்களுக்கும் மேலாக இரு நாடுகளில் இந்தியா மூன்று மடங்கு அதிகமாக ஆண்டிற்கு ஆண்டு கூடுதலாக செலவழித்துவருகிறது. கோல்டன் குவாட்டிரிலேட்டரல் சாலை திட்டம் எனும் பெரிய திட்டத்தினை அரசு நிறைவு செய்துள்ளது. 10பில்லியன் டாலர் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த சாலை 5,000 கி.மீ நீளமானதும், அதிக கால பயன்பாட்டிற்குரியதுமாகும். இப்படியல்லாமல் நாம் செலவு செய்யும் பணம் என்னவாகும்? அமைதி நடவடிக்கைகள், ராணுவச்செலவுக்களை குறைத்திருக்கவேண்டுமே? அமைதிக்கு பொருளாதார மதிப்பு உண்டா?
நமக்கு அமைதி தேவை என்பது அது சிறந்த ஒன்று என்பதோடு, அது நடைமுறையில் செயல்பட வேண்டும். நாம் கொண்டிருக்கும் வரம்புகொண்ட ஆற்றலை சண்டையில் வீணடித்துக் கொண்டிருக்க முடியாது. நமக்கு அமைதி வேண்டும். ஏனெனில் இந்தியாவில் நடைபெறும் நல்ல செயல்பாடுகளை இழக்க விரும்பாததினால்தான் அமைதி தேவை. இதில் நாட்டின் பலவீனம் ஏதுமில்லை.
பாதுகாப்பு தொடர்பான செலவுகள் தொடர்ந்து அதிகரிக்கின்றன. மேலும் இரு நாடுகளும் அணுசக்தி ஆற்றலைக்கொண்டிருக்கின்றன. எந்த தரப்பும் அதிக ஆற்றல் கொண்டிருக்கிறது என்று கூறாத போதும், பாதுகாப்பு தொடர்பான செலவுகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தம்மிடம் உள்ள சக்தியை இருவரும் பயன்படுத்தவே போவதில்லை. இதில் அறிவுக்கு ஏதாவது விஷயம் எட்டுகிறதா?
அமைதி என்பதை தவறாக புரிந்துகொண்ட அதற்கு எதிரானவர்களைப் பற்றி கூற விரும்புகிறேன். பலரும் அமைதி என்பதை அன்போடு இணைத்து தவறாக புரிந்துகொள்கிறார்கள். நம்மில் பெரும்பாலும் அமைதியைத் தேர்ந்தெடுக்கிறோம் காரணம் நாம் இந்தியாவை விரும்புகிறோம்; பாகிஸ்தானை வெறுக்கிறோம். அமைதி என்பது ஃப்ரீ ஹக் போன்ற செய்கையல்ல. அமைதி என்பது வாழு, வாழவிடு என்ற கொள்கையுடையதுதான்.
அமைதி என்பதை உருவாக்குவதாக முடிவெடுத்தபின் அடுத்ததாக அருகிலுள்ள நாடு அது குறித்த செய்முறை எதையும் வெளிப்படுத்தாது இருக்கையில் எப்படி அதனை உருவாக்குவது? என்ற கேள்வி நம் மனதில் எழும். மறுபடியும் இந்த புள்ளி வலுவாகிறது.
அமைதி உருவாக பாகிஸ்தானில் ஜனநாயகம் வலுப்பெறவேண்டும். ஜனநாயக ஆட்சி உருவாகி வளர்ந்து வலுப்பெற்றால் அத்தேசத்தினை நம்பலாம். அதுவரை அத்தேச தலைவர்களை நம்புவது கடினம். ராணுவ சர்வாதிகார ஆட்சியில் அமைதி முயற்சிகள் அசாத்தியமானவையே ஆகும். பாகிஸ்தான் ராணுவம் அமைதிக்கான எந்தவித முயற்சியையும் பொருட்படுத்தாது அவர்களின் அபிமான எதிரியான நம்மைக் குறிவைத்து துப்பாக்கி முனையை வைத்துக் கொண்டிருப்பார்கள்.
பாகிஸ்தானில் ஜனநாயகம் உருவாக இந்தியா முன்னெப்போதும் இல்லாதவகையில் வலுவான முயற்சிகளை எடுத்து வருகிறது. சுயமான சுதந்திரமான அரசு என்பதை உருவாக்க மக்களின் ஆதரவை இவை பெறக்கூடும். பாகிஸ்தானிய மக்களின் ஜனநாயக ஆதரவு ராணுவத்தினை பலவீனமாக்கி, இந்தியாவின் மதிப்பை உயர்த்தலாம். இவை ஓரிரவில் நிகழக்கூடியவை அல்ல. இதனை எவ்வளவு விரைவில் தொடங்குகிறோமோ அவ்வளவு பாகிஸ்தான் நிலையானதாக மாறினால், இந்தியாவின் விவகாரங்களில் பின்வரும் ஆண்டுகளில் அது தலையிடாது.
ஜனநாயக அரசு, ராணுவ ஆட்சி மற்றும் அதற்கு ஆதரவான அரசுகளை வீழ்த்தும் வகையில் அதற்கான முயற்சிகளை நாம் செய்யவேண்டும். கடந்த காலங்களில் அமைதிப்பேச்சுவார்த்தை, தீர்வு கொள்ள விரும்பிய பாகிஸ்தானிய தலைவர்கள் அனைவருமே யாராவது ஒருவரின் மேல் துப்பாக்கி முனையை வைத்துதான் அதிகாரத்திற்கு வந்தவர்களாவர் என்பதை பின்னோக்கி பார்க்கும்போது அறியமுடிகிறது.வெறுப்பு நன்மையை என்றும் அளிக்காது. அமைதி என்பது இளையதலைமுறைக்கு போரைவிட அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தி தரக்கூடும்.
இறுதியாக அமைதி முயற்சிகள் சிரமமானதாக இருந்தாலும், அவற்றை நாம் சந்தேகப்படக்கூடாது. அவை வெற்றியடையலாம் (அ) தோல்வியடையக்கூடும். ஆனால் முயற்சி செய்யவில்லை என்றால் எந்த நம்பிக்கையும் உருவாகாது. ஜான் லெனான் பாடிய இந்த வரிகளைப்போலத்தான் நாம் கோருகிறோம்.
''அனைவரும் அமைதிக்கு வாய்ப்பளிக்கத்தான் கூறுகிறோம்''
கருத்துகள்
கருத்துரையிடுக