இடுகைகள்

அசுரன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ் சினிமாவும் நாவல்களும்! - ஒரு அலசல்!

படம்
எழுத்தாளர் பூமணி வெற்றிமாறன் அசுரன் படத்தை வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு எடுத்து ஜெயித்துவிட்டார். உடனே டெலிகிராம் குழுக்கள் முழுக்க விழிப்புணர்வு பெற்று நூலை பீடிஎஃப்பாக படித்தே ஆக வேண்டும் என இறங்கிவிட்டனர். வெற்றிமாறன் தன் விசாரணை படத்தை லாக்கப் என்ற நாவலை அடிப்படையாக கொண்டு இயக்கினார். நாவல்கள் எல்லாம் வேண்டாம் என கொரிய படங்களை மூலமாக வைத்து மிஷ்கின் போன்றோர் துப்பறிவாளன், முகமூடி என படமாக்குகின்றனர். நாவல்களை படமாக்குவது புதிதல்ல. பாலச்சந்தர் எழுத்தாளர் சிவசங்கரியின் 47 நாட்கள் நாவலை படமாக்கியிருக்கிறார். இவரது ஒரு சிங்கம் முயலாகிறது என்ற கதையை முக்தா சீனிவாசன், அவன் அவள் அது என படமாக்கினார். 1970 காலகட்டத்தில் ஜெயகாந்தன், சிவசங்கரி, அனுராதா ரமணன் ஆகியோரின் நாவல்களைத் தழுவி நிறைய படங்கள் வெளியாகின. அக்காலகட்டம் குடும்பம், காதல், முரண்பாடுகள், சீர்திருத்தம், மரபுகளை மீறுதல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட கதைகளுக்கு வரவேற்பு இருந்தது. எழுத்தாளருக்கும், அதை படமாக தழுவி எடுக்கும் இயக்குநருக்கும் கருத்து ஒற்றுமை அவசியம். இல்லையென்றால் நாவல் படமாக உருவாகாது. அப்படி