ஐரோப்பாவில், ஏடிஸ் கொசுக்கள் இனப்பெருக்கம் அதிகரித்து வருகிறது!
டெங்கு மலேரியா பரவலை காலநிலை மாற்றம் ஊக்கப்படுத்துகிறதா? நவீன மருத்துவத்தின் உதவியால் டெங்கு, மலேரியா இறப்புகள் பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டன. அதைத் தாண்டி அவை பரவுகின்றன, உயிர்ப்பலி வாங்குகின்றன என்றால் அதற்கு காரணம் மருத்துவ வசதிகள் கிடைக்காமல் இருக்கும் பகுதிகளாக இருக்கலாம். ஆனால், ஐரோப்பாவில் ஏடிஸ் மூலம் பரவும் டெங்கு வேகமாக பரவி வருகிறது. இந்த நோய் பரவுவதற்கு தட்பவெப்பநிலையும் முக்கியமான காரணம். ஒருவர் வெளியில் பயணித்து டெங்கு, மலேரியாவுடன் வந்தாலும் கூட ஐரோப்பாவில் உள்ளவர்களுக்கு நோய் பெரிய பாதிப்பை தருவதில்லை. வீட்டில் ஓய்வெடுத்தாலே அவர் நோயிலிருந்து மீண்டு வந்துவிட முடியும். கடந்த 2015 -19 காலகட்டத்தில் மூன்றாயிரம் டெங்கு நோயாளிகள் பற்றிய பதிவுகள் உள்ளன. இவை அனைத்துமே பயணம் சார்ந்து ஏற்பட்டவை. இதில் ஒன்பது நோயாளிகள் மட்டுமே உள்ளூர் அளவில் நோய் வந்து பாதிக்கப்பட்டவர்களாக இருந்தனர். ஆனால் நிலைமை அப்படியே இருக்கவில்லை. கடந்த 2022, 2023 ஆண்டுகளில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை கூடத் தொடங்கியது. 2022இல் மட்டும் பிரான்சில் 65 நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இத...