இடுகைகள்

நிம்மதி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஹாபியை தேர்ந்தெடுத்து வளர்ப்பது எப்படி?

படம்
 பொழுதுபோக்கு பழக்கங்களை வளர்த்துக்கொள்வது எப்படி? சவால் தரும், வேடிக்கையான ஊக்கமூட்டும் பொழுதுபோக்கு பழக்கங்கள் என்னென்ன உங்களிடம் உள்ளன என்று கேட்டால் பலருக்கும் மனதில் கேள்விக்குறிதான் எழும். பலரும் டிவி பார்ப்பார்கள். ரேடியோ பார்ப்பார்கள். இன்ஸ்டாரீல்ஸ் பார்ப்பார்கள். இதில் ஹாபிக்கு எங்கே போவது? பொழுதுபோக்கு என்பது ஒருவருக்கு மன அழுத்தத்தை குறைக்கிறது. தூக்கம் வரவைக்கிறது. தன்னம்பிக்கையைக் கூட்டுகிறது. தன்னளவில் திருப்தியை அளிக்கிறது. மற்றபடி இதில் யாரையும் கவர, திருப்திபடுத்த வேண்டியதில்லை. வேறு உள்நோக்கங்களும் இல்லை. ஒரு கேக்கை சமையல்காரர் ஆர்வமுடன் உருவாக்கி அதை அலங்காரம் செய்து பார்ப்பது போலவே பொழுதுபோக்கு செயல்கள் இருக்கும். இதில் செய்யும் செயல்முறையே முக்கியம். பொழுதுபோக்குகளை ஆக்கப்பூர்வமாக எப்படி அமைத்துக்கொள்வது என்று பார்ப்போம்.  உங்களையே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி பொழுதுபோக்கு எப்படியிருக்கவேண்டுமென யாரும் கூறமாட்டார்கள். அதை செய்யப்போகும் நீங்கள்தான் பல்வேறு கேள்விகளை கேட்டு அதை கண்டறியவேண்டும். நான் செய்யும் செயல் என்னை நெகிழ்வாக வைத்திருக்கவேண்டுமா, கவனத்தை வேறுபக்க