இடுகைகள்

நெற்பயிர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மரபான நெற்பயிர் ரகங்களை சேகரிக்கும் விவசாயி!

படம்
  கரிமங்கலம் தாலூக்காவைச் சேர்ந்த ஜே பாளையத்தைச் சேர்ந்தவர் அமர்நாத்.  தனது நிலத்தில், நாட்டுரக பயிர்களை பயிர்செய்து வருகிறார். சிறுவயதில் தனது தாத்தா பயிரிட்ட கத்தரி செடிகளை பார்வையிட்ட நினைவு அவருக்கு இப்போதும் இருக்கிறது.  விவசாயத்தை பட்டப்படிப்பில் எடுத்து படித்தவருக்கு, வேலை எளிதாக கிடைக்கவில்லை. சரி இருக்கும் நிலத்தில் பயிர்களை பயிரிடலாம் என்று நினைத்து உழைத்த உழைப்பும் கைகொடுக்கவில்லை. எனவே, நாட்டு ரக பயிர்களைத் தேடி தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களுக்கு சென்றார்.  நான் பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று விவசாயம் செய்பவர்களிடம் பேசினேன். அதில் நாட்டு ரக பயிர்கள் பலவும் அழிந்துவிட்டதை அறிந்தேன். ஆனால் அதை நான் ஏற்கவில்லை. அந்த நிலையை மாற்ற விரும்பினேன். நினைத்ததோடு அல்லாமல் அதற்காக உழைக்க விரும்பினார். அப்படித்தான் ஐந்து ஆண்டுகளில் 26 நாட்டு ரகங்களை சேகரித்தார்.  பழங்குடிகள் வாழும் ஊர்களான மோதுர், வத்தல்மலை, சித்தேரி, பெத்தமுகிலாலம் சென்று நாட்டு நெற்பயிர் ரகங்களை சேகரித்திருக்கிறார். இவை அதிக பராமரிப்பு கோராதவை. எளிதாக பூச்சிகளையும், நோய்களையும் சமாளிக்க முடியும் திறன் கொண்

நெற்பயிருக்கு நன்மை செய்யும் பூச்சி வகைகள்!

படம்
  நெற்பயிருக்கு நன்மை செய்யும் பூச்சி வகைகள்! நெற்பயிரில் ஏற்படும் நோய்த் தாக்குதலை இயற்கையாக கட்டுப்படுத்துபவை பூச்சி இனங்கள். ஆனால் இவை வயலுக்கு வரத் தடையாக இருப்பது, பல்வேறு நச்சுத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லிகள் ஆகும்.  நன்மை செய்யும் பூச்சிகளை நாம் வயலுக்கு வரவைத்தால், பூச்சிக்கொல்லி செலவுகள் பெருமளவு குறையும். சில நெற்பயிருக்கு நன்மை செய்யும் பூச்சி இனங்களைப் பார்ப்போம்.   முட்டை ஒட்டுண்ணிகள்,  கிரைசோபா,   குளவி இனங்கள்,  தட்டான் இனங்கள்,  பொறி வண்டு, நீளக்கொம்பு வெட்டுக்கிளி, சிலந்தின இனங்கள்  ஆகியவை வயலில் உள்ள பூச்சிகளை தின்று பயிர்களைக் காப்பாற்றுகின்றன.  முட்டை ஒட்டுண்ணிகள் கைகோகிரம்மா டெலிநாமஸ், டெட்ராஸ்டிக்ஸ் ஒட்டுண்ணிகள் காய்ப்புழுக்களின் மீது முட்டையிட்டு, அவற்றின் இனத்தை அழிக்கின்றன. இந்த ஒட்டுண்ணிகள் கருப்பு நிறம் கொண்டவை. தன் வாழ்நாளில் இருபது முதல் நாற்பது தீமை செய்யும் பூச்சிகளை அழிக்கின்றன.  கிரைசோபா இப்பூச்சி, குஞ்சுப் பருவத்திலிருந்தே அசுவினி, இலைப்பேன் ஆகியவற்றைத் தாக்குகிறது. ஆண்பூச்சிகள் 12 நாட்களும், பெண் பூச்சிகள் 35 நாட்களும் உயிர்வாழும்.  தன் வாழ்நாளில் கிரை

அடுக்குமாடியில் விவசாயம்! - புதிய விவசாய முறையில் உற்பத்தி கொட்டுகிறது

படம்
  cc   அடுக்கு மாடியில் விவசாயம் ! இன்று விவசாயம் செய்வதற்கான குறைந்தபட்ச ஆர்வம் அனைவருக்கும் இருக்கிறது . ஆனால் அதற்காக தேவைப்படும் நிலம் என்பதை பலரும் தடையாக நினைத்து முடங்கிவிடுகின்றனர் . சிங்கப்பூரில் பள்ளிகள் , வணிக வளாகங்கள் , வாகன நிறுத்தங்கள் , பன்னடுக்கு வளாகங்கள் , குடியிருப்புகள் என எங்கெங்கு முடியுமோ அங்கெல்லாம் விவசாயம் செய்துவருகின்றனர் . ” இன்றைய சிங்கப்பூரில் விவசாய தலைமுறை என்பதே இல்லாமல் போய்விட்டது” என்கிறார் ஐ . நாவின் புதுமைத்திறன் மற்றும் சூழலுக்குகந்த விவசாய அமைப்பின் தலைவரான பிராட்லி பசெட்டோ . இன்று சிங்கப்பூரில் 1 சதவீத நிலப்பரப்பில் , அதாவது , 720 சதுர கி . மீ . பரப்பில் விவசாயம் சிறப்பாக நடைபெற்று வருகிறது . இந்நாடு , தற்போது 90 சதவீத உணவுப்பொருட்களை இறக்குமதி செய்துவருகிறது . 2030 க்குள் 30 சதவீத உள்நாட்டு உணவு உற்பத்தி என்பதே சிங்கப்பூர் அரசின் லட்சியம் . 2014 ஆம் ஆண்டில் இங்கு 31 வணிகரீதியான விவசாயப் பண்ணைகள் தொடங்கப்பட்டுவிட்டன . நாட்டில் விவசாயத்தை வளர்க்க 20.7 கோடி ரூபாயை அரசு மானியமாக அளித்துள்ளது . தொழில்நுட்பங்கள் எப்போது கூடுதல்

நெற்பயிரை பயிரிட நாற்றங்காலாக நட வேண்டுமா?

படம்
pixabay நெல்லின் சேமிப்பு வரம்பு நவீன நெல்ரகங்களை ஆலைகளில் இரண்டு ஆண்டுகள் மட்டுமே சேமித்து வைக்கின்றனர். காலாநமக், சிவப்பரிசி போன்ற உப்புச்சத்து கொண்ட அரிசி ரகங்களை அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் சேமித்து வைக்க முடியும். சேமிக்கும் காலம் அதிகரிக்கும்போது நெல்லின் முளைப்புத்திறன் குறையும்.  நெல்லுக்கு நாற்றாங்கால் எதற்கு? நெற் தாவரத்தின் கனிதான் நெல். நெல் என்பது ஒருவித்திலை தாவரம். கடினமான ஓடுகளைக் கொண்ட தென்னை மரம் போன்றவற்றை மண்ணில் நடலாம். ஆனால் நெல்லுக்கு இந்த வாய்ப்பு இல்லை. இப்பயிருக்கு அதிக நீர்வளம், சரியான சீதோஷ்ணம் தேவை. அதிக மழைப்பொழிவு கொண்ட நிலமாக இருந்தால் நெல் அழுகிவிடும். அதேநேரம், நெல், வறட்சியான மண்ணில் இருந்தால் காய்ந்துவிடும். எனவே நெற்பயிருக்கு நாற்று விட்டு அதன் முளைப்புத் திறன் அதிகப்படுத்தி நடுகிறார்கள். ஒரைசா சட்டவைவா எனும் நெல்லின் காட்டு ரகத்திற்கு இவை எதுவும் தேவையில்லை. அவை தானாகவே நிலத்தில் விழுந்து முளைக்கும். பிற விதை ரகங்களைப் போல நிலத்தில் நெல்லைத் தூவினால் அவை முளைக்க அதிக சவால்களை எதிர்கொள்ளும் எனவே, நெல்லுக்கு நாற்றாங்கால்

நெற்பயிருக்கு நன்மை செய்யும் பூச்சி வகைகள் எவை?

நெற்பயிருக்கு நன்மை செய்யும் பூச்சி வகைகள்! நெற்பயிரின் நோய்த்தாக்குதலை இயற்கையாக கட்டுப்படுத்துபவை பூச்சி இனங்கள். ஆனால் இவை வயலுக்கு வரத் தடையாக இருப்பது, பல்வேறு நச்சுத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லிகள் ஆகும். நன்மை செய்யும் பூச்சிகளை நாம் வயலுக்கு வரவைத்தால், பூச்சிக்கொல்லி செலவுகள் பெருமளவு குறையும். சில நெற்பயிருக்கு நன்மை செய்யும் பூச்சி இனங்களைப் பார்ப்போம்.  முட்டை ஒட்டுண்ணிகள்,   கிரைசோபா,   குளவி இனங்கள், தட்டான் இனங்கள், பொறி வண்டு, நீளக்கொம்பு வெட்டுக்கிளி ஆகியவை வயலில் உள்ள பூச்சிகளை தின்று பயிர்களைக் காப்பாற்றுகின்றன.  முட்டை ஒட்டுண்ணிகள் கைகோகிரம்மா டெலிநாமஸ், டெட்ராஸ்டிக்ஸ் ஒட்டுண்ணிகள் காய்ப்புழுக்களின் மீது முட்டையிட்டு, அவற்றின் இனத்தை அழிக்கின்றன. இந்த ஒட்டுண்ணிகள் கருப்பு நிறம் கொண்டவை. தன் வாழ்நாளில் இருபது முதல் நாற்பது தீமை செய்யும் பூச்சிகளை அழிக்கின்றன.  கிரைசோபா இப்பூச்சி, குஞ்சுப் பருவத்திலிருந்தே அசுவினி, இலைப்பேன் ஆகியவற்றைத் தாக்குகிறது. ஆண்பூச்சிகள் 12 நாட்களும், பெண் பூச்சிகள் 35 நாட்களும் உயிர்வாழும். தன் வாழ்நாளில் கிர