அடுக்குமாடியில் விவசாயம்! - புதிய விவசாய முறையில் உற்பத்தி கொட்டுகிறது
cc |
அடுக்கு மாடியில் விவசாயம்!
இன்று விவசாயம் செய்வதற்கான குறைந்தபட்ச ஆர்வம் அனைவருக்கும் இருக்கிறது. ஆனால் அதற்காக தேவைப்படும் நிலம் என்பதை பலரும் தடையாக நினைத்து முடங்கிவிடுகின்றனர். சிங்கப்பூரில் பள்ளிகள், வணிக வளாகங்கள், வாகன நிறுத்தங்கள், பன்னடுக்கு வளாகங்கள், குடியிருப்புகள் என எங்கெங்கு முடியுமோ அங்கெல்லாம் விவசாயம் செய்துவருகின்றனர்.
”இன்றைய சிங்கப்பூரில் விவசாய தலைமுறை என்பதே இல்லாமல் போய்விட்டது” என்கிறார் ஐ.நாவின் புதுமைத்திறன் மற்றும் சூழலுக்குகந்த விவசாய அமைப்பின் தலைவரான பிராட்லி பசெட்டோ. இன்று சிங்கப்பூரில் 1 சதவீத நிலப்பரப்பில், அதாவது, 720 சதுர கி.மீ. பரப்பில் விவசாயம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நாடு, தற்போது 90 சதவீத உணவுப்பொருட்களை இறக்குமதி செய்துவருகிறது. 2030க்குள் 30 சதவீத உள்நாட்டு உணவு உற்பத்தி என்பதே சிங்கப்பூர் அரசின் லட்சியம். 2014ஆம் ஆண்டில் இங்கு 31 வணிகரீதியான விவசாயப் பண்ணைகள் தொடங்கப்பட்டுவிட்டன. நாட்டில் விவசாயத்தை வளர்க்க 20.7 கோடி ரூபாயை அரசு மானியமாக அளித்துள்ளது.
தொழில்நுட்பங்கள் எப்போது கூடுதல் விலை கொடுத்தால்தானே பெற முடியும்? அதனால் நகரங்களின் உள்ளே விவசாயம் செய்வதற்கு அதிக செலவாகிறது. இதனால் பலரும் நகரங்களுக்கு வெளியே உள்ள கட்டடங்களின் உள்ளறையில் எல்இடி பல்புகள் மூலம் பல்வேறு உணவுப்பயிர்களை விளைவித்து வருகின்றனர். மேம்பட்ட தொழில்நுட்பங்களின் உதவியால் ஒரு சதுர மீட்டருக்கு நிலத்தில் விளைவிப்பதை விட 178 மடங்கு அதிக விளைச்சல் அறை, கூரை விவசாயம் மூலம் கிடைப்பது பிரமிக்க வைக்கிறது.
தகவல்: எகனாமிஸ்ட் இதழ்
கருத்துகள்
கருத்துரையிடுக