இணைய உலகை ஆளும் கருப்பு உலக ராஜாக்கள்! எதிர்கொள்வது எப்படி?

 

 

 

 

Man, Face, Facial Expression, Body, Naked, Human
பிக்சாபே


 

கருப்பு உலக ராஜாக்கள்!

இன்று நம்முடைய தினசரி நடவடிக்கைகள் பலவும் இணையம் சார்ந்ததாக, ஸ்மார்ட்போனிலேயே செய்துகொள்ள முடிவதாக மாறிவிட்டன. அலுவலகப் பணிகளை வீட்டிலிருந்தே இணையம் மூலம் செய்யமுடிகிறது. பல்வேறு கட்டணங்களை ஸ்மார்ட்போனிலிலுள்ள செயலிகள் மூலம் கட்ட முடிகிறது. அதேசமயம், இதில்தான் பல்வேறு தில்லுமுல்லும், மோசடிகளும் நடந்தேறுகின்றன.

மார்ச் 11 அன்று, உலக சுகாதார நிறுவனம் கோவிட் -19 நோயை பெருந்தொற்றாக அறிவித்தது. இக்காலத்தில் மக்களுக்கு ஏராளமான ஸ்பாம் எனும் குப்பை மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டன. இவற்றை அவசர உதவி தேவை என்று திறந்தவர்களின் தகவல்கள் திருடப்பட்டன. கணினியில் இருந்த தகவல்கள் அழிந்துபோயின. இதுபோன்ற சூழலைத் தடுக்கவே சீனா 1 லட்சம், பாகிஸ்தான் 10 ஆயிரம், இந்தியா 1000 பேர் என தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிக்கு எடுத்து தகவல்களை பாதுகாத்து வருகின்றனர். இவர்களின் செயல்பாட்டை (Hackers as a service) என்று அழைக்கின்றனர். பொருளாதார மந்தநிலை உள்ளபோதும், ஹேக்கர்ஸ்களால் பல்வேறு இணையம் சார்ந்த குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன

அண்மையில் சீன ஹேக்கர்கள், ஆஸ்திரேலியா நாட்டு கணினிகளைத் தாக்கினர். ”வணிக விவரங்கள் மட்டுமன்றி, பல்கலைக்கழக மாணவர்களின் ரேங்குகளைக் கூட மாற்றும் திறனை இவர்கள் கொண்டிருக்கின்றனர்” என்கிறார் ஐபிஎம் இன்டலிஜென்ஸ் ஆசிய பிரிவுத் தலைவர், மேத்யூ கிளிட்ஸர். இந்த ஹேக்கர்களில் பிளாக், வொயிட், கிரே என மூன்று பிரிவினர் உண்டு. கருப்பு வகையினர், நிறுவனங்களின் தகவல்கள், தனிப்பட்டவர்களின் தகவல் ஆகியவற்றைத் திருடுவார்கள். வெள்ளை வகையினர், நிறுவனங்களில் இணைய பாதுகாப்பை பலப்படுத்த உழைப்பாளர்கள். கிரே வகையினர், இவர்கள் ஒரு நிறுவனத்தின் தகவல்களைத் திருடி பிறருக்கு காசுக்கு விற்பார்கள். அல்லது தகவல்களை பொது உரிமை வலைத்தளத்தில் பதிவிடுவார்கள். பணிகளை வழங்குபவர்கள், இவர்களுக்கு சம்பளத்தை டாலர்களிலும், பிட்காயின்களாகவும் வழங்குகின்றனர். மக்கள் விழிப்புணர்வாக இருப்பது இணையத்தில் உலவுவதை பாதுகாப்பானதாக்கும்.

தகவல்: எகனாமிக் டைம்ஸ்





கருத்துகள்