குளோனிங் முறைக்கு உருவாகும் எதிர்ப்புகள்!
காணாமல் போன குளோனிங் முறை!
நம்மைபோல இன்னொருவர் இருந்தால் எப்படியிருக்கும்? இந்த எண்ணத்தை சாத்தியப்படுத்திய குளோனிங் ஆராய்ச்சிகள் தொடங்கி இருபது ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இன்றுவரை டிஎன்ஏ விஷயங்களில் நிறைய முன்னேற்றங்களை அடைந்தும், ஆராய்ச்சியாளர்கள் அதனை பெரியளவில் தொடரவில்லை. இம்முறையில் உள்ள இடர்ப்பாடுகள்தான் இதற்கு காரணம். 1996ஆம் ஆண்டு டாலி என்ற செம்மறியாடு குளோனிங்கில் உருவாக்கப்பட்டது. இம்முயற்சி வெற்றியடைய 277 முறை ஆராய்ச்சியாளர்கள் உழைக்கவேண்டியிருந்தது. அதைத் தொடர்ந்து முயல், எலி, குதிரை, நாய் பல்வேறு விலங்குகளும் உருவாக்கப்பட்டன.
குளோனிங் முறையின் மூலம் மனிதர்களின் வாழ்நாளை அதிகரிக்கும் முடியும் என்றுதான் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டன. ஆனால் மனிதர்களிடமிருந்து பெறப்பட்ட செல்களால் உருவாகும் குளோனிங் நகலின் வாழ்நாள் குறைவாகவே உள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டது. தானம் பெறப்பட்ட குரோமோசோம்களை கருவில் வைத்தாலும் அதன் தன்மை, மனிதர்களுடையதைப் போல இயல்பாக இல்லை. தானம் பெறப்பட்ட முட்டையிலிருந்து மையக்கருவை எடுப்பதும் கடினமானதாகவே ஆராய்ச்சியாளர்களுக்கு இருந்தது.
குளோனிங் தொடர்பான ஆராய்ச்சி சிந்தனை ரீதியிலும் ஆபத்தானதாகவே கருதப்படுகிறது. இதன்மூலம் இறந்துபோன ஒருவரை மீண்டும் உயிருடன் மீட்டெடுக்க முடியும் என்பது மனிதர்களுக்கு ஆபத்தாகலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. 2002ஆம் ஆண்டு குளோனாய்டு என்ற உயிரி தொழில்நுட்ப நிறுவனம், ஈவ் என்ற பெயரில் பெண் குழந்தையை குளோனிங் மூலமாக உருவாக்கிவிட்டோம் என்று அறிவித்தது. ஆனால் இதற்கு நிரூபணமாக எந்த புகைப்படமும், ஆய்வு விவரங்களும் கிடைக்கவில்லை. இதனால் மருத்துவ உலகமும், மக்களும் குளோனிங் என்பது வதந்தியான செய்தி என்று முடிவுக்கு வந்தனர். இம்முறை மூலம் அழிவின் விளிம்பில் உள்ள விலங்குகளை அழியாமல் பாதுகாக்கும் வாய்ப்பு உள்ளது.
தகவல்: ஹவ்இட்வொர்க்ஸ் இதழ்
கருத்துகள்
கருத்துரையிடுக