மூன்று பேரின் இறப்பிற்கு காரணமாக குடும்பத்திற்கு கருப்பசாமி வழங்கும் நீதி! விட்டுவிடு கருப்பா - இந்திரா சௌந்தர்ராஜன்
விட்டுவிடு கருப்பா
இந்திரா சௌந்தர்ராஜன்
ரத்னா நகரில் வேலை பார்த்து வருகிறாள். அவள் மருத்துவராக பணிபுரியும் அதே இடத்தில் அரவிந்தும் மருத்துவர். கூடவே அவளைக் காதலித்தும் வருகிறான். காதல் புரிந்தாலும் ரத்னா கண்டும் காணாததுமாகவே இருக்கிறாள். என்ன காரணம் அவளது புத்திசாலி பகுத்தறிவுவாதியான தோழி ரீனா கேட்கிறாள். அதற்கு அவளது ஊரைச்சேர்ந்த கருப்பசாமி யாரை கைகாட்டுகிறதோ அவரைத்தான் கல்யாணம் செய்துகொள்ளமுடியும்.இல்லையென்று மறுத்தால் உயிர் காலி என்கிறாள். அதற்கேற்ப ரத்னாவின் குடும்பத்தில் பல்வேறு துர்மரணங்கள், விபத்துகள் ஏற்படுகின்றன.
உண்மையில் இதெல்லாம் அமானுஷ்யமாக இருக்கிறது என ரீனா துப்பறிய கிளம்புகிறாள். அதில் அவள் கண்டுபிடிக்கும் சமாசாரங்கள்தான் கதையில் முக்கிய திருப்புமுனை.
நாயக்கர் பங்களாவில் வரும் கடைசி பகுதி ட்விஸ்ட் இதிலும் உண்டு. ஆனால் அது பொருத்தமாக இல்லை என்பதுதான் நெருடல்.
ஊர் பஞ்சாயத்து தலைவரான தேவர், பக்தியை விட பணத்தை அதிகம் நம்புபவர். அவரின் மனைவிக்கு குடும்பம் நன்றாக வாழவேண்டுமென்ற ஆசை. அவளது மாமியார் வட்டிக்கு பணம் கொடுத்து ஊர் சாபத்தை வாங்கிக்கொண்டாலும் எதையும் எதிர்த்து நிற்பவள். அவளுடைய மகன் கட்டையன் செய்யும் பெண்ணாசை விபரீதம், அந்த ஊரைச் சேர்ந்த மூவரின் உயிரை பலிவாங்குகிறது. ஆனால் இதையெல்லாம் கருப்பசாமி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதுபோல நாவல் செல்கிறது.
முடிவில் அனைவருக்கும் தண்டனை கொடுப்பவராக இருந்த கருப்பசாமி யார் என்பது வெளிச்சமாகிறது. ஆனால் அவர் செய்தது, நியாயமான தனது குடும்பத்திற்கான பழிவாங்குதல் என்றாலும் கூட அதில் நியாயம் இருக்கிறது. காரணம், தேவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாருக்கும் உயிர் போகாது. தவறுக்கான தண்டனையை உடல் அளவில் அனுபவிக்கும் படி சூழல் ஏற்படுகிறது.
ஒருவரின் தங்கையை கற்பழித்துவிட்டு, தந்தையின் சொத்துகளை ஏமாற்றி பிடிங்கிக்கொண்டு நன்றாக வாழும் குடும்பத்தினரை கருப்பசாமி ஒன்றுமே செய்வதில்லை. சிலையாகவே நிற்கிறார். ஆனால் அந்த பெயரில் புறப்படும் ஒருவர் அந்த குடும்பம் மட்டுமல்ல தவறு செய்யும் எவருக்கும் பாரபட்சமின்றி தண்டனை வழங்குகிறார். அவரைக் கொல்வது போல காட்டுவது கதைக்கு பொருந்தவில்லை.
கருப்பனின் நீதி - அநீதி
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக