நவீன காலத்திற்கு ஏற்ப கோத்ரெஜ் பிராண்டை மாற்றி அதனை சந்தையில் வேர்பிடிக்க வைத்த பெண்மணி! - தன்யா துபாஷ்
தன்யா துபாஷ், கோத்ரெஜ்
தன்யா துபாஷ், நவீன காலத்தில் பழமையான கோத்ரெஜ் பிராண்டுகளை சிறப்பாக விற்பனை செய்யும் திட்டங்களை தீட்டி வருபவர். காலத்திற்கும், மக்களுக்கும் ஏற்றபடி கோத்ரெஜ் பிராண்டுகளில் பல்வேறு மாற்றங்களை செய்து அதன் ஆயுளை நீட்டிப்பவர் இவரே. அண்மையில் வலுவாக இருக்கும் துறைகளில் ஒரு காலையும், மாறிக்கொண்டு இருக்கு்ம் பிற துறைகளில் மற்றொரு காலை நகர்த்தியபடி இருக்கும் சூத்திரத்தை கோத்ரெஜ் நிறுவனம் கடைபிடித்து வெற்றி பெற்று வருகிறது.
இதன் காரணமாகவே பலகோடி பயனர்களிடையே கோத்ரெஜ் பொருட்கள் இன்றும் சென்று சேர்கின்றன. ஹார்வர்ட் வணிகப்பள்ளியில் பட்டம் பெற்றவர், ப்ரௌன் பல்கலைக்கழகதில் பொருளாதாரம், அரசியல் அறிவியல் பயின்றவர். கோத்ரெஜ் நிறுவனத்தின் பல்வேறு நிறுவனங்களின் போர்டுகளில் உறுப்பினராக, தலைவராக, இயக்குநராக செயல்பட்ட அனுபவம் கொண்டவர்.
கருத்துகள்
கருத்துரையிடுக