எதிர்காலத்தில் உணவு எப்படியிருக்கும்? பிபிசியின் யூகம் இதுதான்!

 

 

 

Asparagus, Steak, Veal Steak, Veal, Meat, Barbecue
cc

 

 

 


எதிர்கால உணவுகள்

செயற்கைப் பால்

ஃபர்பெக்ட் டே என்ற நிறுவனம், பால் உற்பத்தி செய்ய உதவும் ஜீன்களை யீஸ்டில் கலக்கி செயற்கைப் பாலை உற்பத்தி செய்து வருகிறது. விரைவில் இந்த பால் சந்தைக்கு வரும்.

ஆய்வகத்தில் இறைச்சி

2013ஆம் ஆண்டு ஆய்வகத்தில் உருவாக்கி இறைச்சியை வைத்து தயாரித்த பர்கர் அனைவருக்கும் காட்டப்பட்டது. ஆனால் இதனை தயாரிக்கவும் வாங்கவும் அதிக செலவானது. மெம்பிஸ் மீட் எனும் நிறுவனம் தற்போது ஆய்வகத்தில் தயாரிக்கப்படும் இறைச்சியின் விலையைக் குறைக்க முயன்று வருகிறது. இதன்காரணமாக 2400 டாலர்கள் விலை கொண்ட இறைச்சி விரைவில் 5 டாலர்கள் என்ற விலைக்கு விற்கப்பட வாய்ப்புள்ளது. சூப்பர் மார்க்கெட்டுகளில் இத்தகைய இறைச்சி விற்கப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

பலவகை இறைச்சி

ஆமைகள், முதலைகளை, பாம்பு, பல்லிகள் என கிடைக்கும் அனைத்தையும் சாப்பிட மக்கள் கூட்டம் தயாராகிவருகிறது. புரதம் இவற்றில் அதிகம் உள்ளதே முக்கியமான காரணம், நோய்த்தொற்று பரவுவது தற்காலிகமாக இந்த இறைச்சி விற்பனையை குறைத்திருக்கலாம். ஆனால் விரைவில் இந்த இறைச்சியை எப்போதும் போல மக்கள் சாப்பிட அதிக வாய்ப்புள்ளது.

3டி உணவுகள்

3 டி பிரிண்டர் வந்தவுடனே அதில் துப்பாக்கி செய்து பார்த்துவிட்டார்கள். அடுத்து பல்வேறு வகை பொருட்களை அதில் செய்தார்கள். ஆனால் அதில் உணவு தயாரிக்க முடிந்தால்... நன்றாக இருக்கும் அல்லவா? இதற்கான முயற்சிகள் வெற்றியடைந்தால் வீட்டிலேயே பர்கர், பீட்ஸா செய்து சாப்பிட்டுவிட்டு வேலையைப் பார்க்கவேண்டியதுதான்.

பாசி உணவு

கடலில் வாழும் பாசிகளை ஜப்பானியர்கள் உணவுடன் சேர்ந்து சாப்பிடுகிறார்கள். இதனால் பாசிகளை கடலில் வளர்க்கும் போக்கு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் உணவை எளிதாக பெறலாம். இதில் சத்துகளும் நிறைய உண்டு.

bbc 

கருத்துகள்