பெண்களின் வயதை அதிகரிப்பதால் பாலியல் பாகுபாடு குறைந்துவிடாது! - ஆண் 21, பெண் 18 வயது விவகாரம்!

 

 

 

 

The "ugly" reality of child marriage in the U.S. - CBS News
குழந்தை திருமணம் -cbs news

 

 

 

பெண்களின் திருமண வயதை 18லிருந்து 21ஆக அதிகரிக்க மத்திய அரசு யோசித்து வருகிறது. இதுபற்றி அண்மையில் சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி குறிப்பிட்டார். இந்த விவகாரம் பற்றி மது மெஹ்ரா, ஜெய்னா கோத்தாரி ஆகிய இருவரிடம்(குழந்தை திருணம் தடுப்பு சார்ந்த செயல்பாட்டாளர்கள்) பேசினோம்.


பெண்களின் திருமண வயதை உயர்த்துவதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?

மது

பதினெட்டு வயதாகுவதற்கு முன்னரே பெண்கள் தங்கள் கணவர்களை காதலித்து கைபிடிக்க நினைத்தால், பெற்றோர்கள் அவர்களை பிரிக்க மைனர் பெண்ணை கடத்திவிட்டார்கள் என்று புகார் கொடுத்து தன் பெண்ணை காவல்துறை மூலம் பெறுகிறார்கள். இதன்மூலம் தங்கள் மகள்களுக்கு தண்டனையை அளிக்கிறார்கள். வயது 21 என ஆகும்போது இதில் என்ன மாற்றங்கள் ஏற்படும் என்று தெரியவில்லை. விஷயம் இங்கு சட்டமல்ல. உங்கள் மகள்களின் கருத்துகளை முடிவுகளை நீங்கள் ஏற்கிறீர்களா என்பதுதான்.

பொதுவாக இச்சட்டத்தைப் பார்ப்பவர்கள் குழந்தை திருமணம் தவிர்க்கப்படும் என்று நினைக்கிறார்கள். ஒருவகையில் பெண்கள் 21 வயது வரை திருமணம் செய்யாமல் இருக்கும்போது அவர்களுக்கு சமூக பொருளாதார தகுதியை அடையும் வாய்ப்பு உள்ளது.

குழந்தை திருமணச்சட்டம் 200 பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

ஆண்களுக்கு 21, பெண்களுக்கு 18 என்பதுதான் சட்டம் சொல்லும் செல்லுபடியாகும் வயது. ஆனால் பெண், தனக்கு திருமணத்தில் உடன்பாடு உண்டு என்று சொன்னால் சட்டம் செல்லுபடியாகாது என்றாலும் அவர்களின் உறவு நீடிக்கலாம். அதனை சமூக அமைப்புகளோ காவல்துறையோ தடுக்க முடியாது. தெளிவாக புரிந்துகொள்ளுங்கள். பதினெட்டு வயதிற்கு முன்னர் நடைபெறும் திருமணம் சட்டப்படிதான் செல்லாது. ஆனால் அதனை அப்பெண் தன் விருப்பம் சார்ந்து அணுகினால் அவர்கள் வாழ்வதற்கு தடை ஏதும் கிடையாது.

குழந்தை திருமணம், கடத்தல் என பெற்றோர் குற்றம் சாட்டி இதனை அவர்களே ஏற்பாடு செய்த திருமணமாக மாற்றும் விவகாரங்களும் நிகழ்வதுண்டு. ராஜஸ்தானில் பன்வாரி தேவி இதுபோல உயர்ஜாதி குழந்தை திருமணத்தை தடுத்த காரணத்தால் குழு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டார். இந்தியாவிலுள்ள பல்வேறு சமூகங்களில் குழந்தை திருமணம் பற்றிய விழிப்புணர்வு இன்னும் ஏற்படவில்லை.

ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் செய்வதற்கான வயது 21 என்று இருப்பது பாலியல் சமத்துவத்தை வலியுறுத்துகிறது என்று கூறலாமா?

ஜெய்னா

ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணம் செய்யும் வயது ஒன்றாக இருப்பது ஏற்க கூடியது. ஆனால் பெண்களின் வயதை 21 ஆக உயர்த்துவது என்பதை நான் ஏற்கவில்லை. பெண்களுக்கு 18 வயது என்று விதி உருவானதே, அவர்களின் அறிவு முதிர்ச்சி வேகம் அதிகம் என்பதால். ஆனால் அது இக்காலத்திற்கு பொருந்தாது. 2008ஆம் ஆண்டு சட்ட கமிஷன், மனித உரிமைக் கமிஷன் என இரண்டு அமைப்புகளும் ஆண், பெண் இருவரின் வயதையும் 18ஆக மாற்றவே வலியுறுத்தின. எனவே, பெண்களின் வயதை 21ஆக மாற்றுவதை நான் ஏற்கவில்லை. இருவருக்கும் ஒரே வயது இருப்பதே சிறப்பானது.

மது

நான் இந்தக்கூற்றை ஏற்கவில்லை. பாலியல் சமத்துவம் என்பது வயது அல்ல. அது அப்படி இருக்கவும் கூ  டாது. ஆண், பெண் இருவருக்கும் வயது 18இல் திருமணம் செய்யலாம் என அரசு கூறுகிறது. இது இந்தியச்சமூகத்தில் எப்படி நடக்கும் தெரியுமா? 15 அல்லது 16 வயதில் பெண்ணைப் பார்த்து 18 வயது ஆணுக்கு கல்யாணம் செய்வார்கள்.மாற்றமே இல்லை. இப்படித்தான் நடக்கும்.

2017ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம், குழந்தை திருமணம் செய்து பெண்ணுடன் உடலுறவு கொள்வது கற்பழிப்பு குற்றமாக கருதப்படும் என்று கூறியுள்ளது. இதனை எப்படி பார்க்கிறீர்கள்.

குழந்தை திருமணங்களால் பெண்கள், குடும்ப வன்முறை, கட்டாய வல்லுறவு, முன்கூட்டியே கர்ப்பிணியாவது ஆகிய பிரச்னைகள் நேருகின்றன. எனவேதான், நாம் குழந்தை திருமணங்கள் சட்டப்படி செல்லாது என்று கூறிவருகிறோம். இதன்மூலம் நிர்பந்த கல்யாணங்களை தடுக்க முடியும்.

the hindu





 

கருத்துகள்