கோத்ரெஜ் நிறுவனத்தின் பிராண்டுகளின் வளர்ச்சி உயர காரணம் இவர்தான்! - சோமஸ்ரீ போஸ் அவஸ்தி
சோமஸ்ரீ போஸ் அவஸ்தி
கோத்ரெஸ் பயனர் பொருட்கள்- அழகுசாதனப்பொருட்கள் விற்பனைப் பிரிவு தலைவர்.
அவஸ்தியினுடைய வேலை ஹிட், குட்நைட், சோப்புகள், அறை வாசனை திரவியங்கள் ஆகியற்றை சிறப்பாக விற்று சந்தையில் முக்கியமான நிறுவனமாக மாறுவதுதான். தற்போது நிறுவனத்தின் வர்த்தக மதிப்பு 3500 கோடியாக உள்ளது. இவர்களின் சோப்புகளில் சிந்தால், கோத்ரெஜ் நெ. 1 ஆகிய சோப்பு பிராண்டுகள் சிறப்பாக விற்பனையாகி வருகின்றன. அவஸ்தி தலைமையேற்ற சில ஆண்டுகளில் பூச்சிமருந்தான ஹிட் 11 மடங்கு வளர்ச்சி பெற்றுள்ளது.
2019ஆம் ஆண்டில் கூட கோத்ரெஜ்ஜின் தனிநபர் பொருட்கள் அழகு சாதனப் பொருட்கள் பெரிதாக விற்பனையில் சுணங்கவில்லை. இந்த நேரத்தில் கோத்ரெஜ் ஏர், கோத்ரெஜ் புரொடெக்ட் ஹேண்ட்வாஷ் சிறப்பாக விற்றுள்ளன.
2
ரதி கங்கப்பா
ஸ்டார்காம் இந்தியா
இயக்குநர்
குரூப் எம், வோடபோன் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் ரதி. முக்கியமான விருது பெறும் விளம்பரங்களை சிறப்பாக தயாரிக்கும் திறன் பெற்றவர். விளம்பரம், பிரசாரம்,நிறுவனங்கள் சார்ந்து 20 ஆண்டுகள் அனுபவங்கள் பெற்றுள்ளார். தொழில்துறை 15 சதவீத வளர்ச்சி காண்பித்தால் இவரது ஸ்டார்காம் நிறுவனம் 22 சதவீத வளர்ச்சியோடு முன்னேறிக்கொண்டிருப்பதே இவரது திறனுக்கு சான்று. பல்வேறு துறை சார்ந்த நூல்களை படிப்பதிலும் யோகா செய்வதிலும் பேரார்வம் கொண்டவர் ரதி கங்கப்பா.
கருத்துகள்
கருத்துரையிடுக