குடும்பத்தின் சாபம் தீர்க்க கொள்ளையடிக்கும் துரதிர்ஷ்டசாலி லோகன்! - லோகன் லக்கி 2017
லோகன் லக்கி |
லோகன் லக்கி
Directed bySteven Soderbergh Written byRebecca Blunt
Music by | David Holmes |
---|---|
Cinematography | Peter Andrews[a] |
லோகன் குடும்பத்திற்கு உள்ள சாபத்தில் அண்ணன் ஜிம்மிக்கு காலில் அடிபட்டு விடுகிறது. விவாகரத்து வாங்கிய மனைவியிடம், தன் குழந்தையைப் பார்க்க கூட போராடும் நிலை. சுரங்கத்தில் வேலை பார்ப்பவருக்கு காலில் அடிபட்டு ஊனமான காரணத்தால் வேலை செய்ய தகுதியில்லை என்று நிராகரித்து வேலையிலிருந்து நீக்கிவிடுகிறார்கள். இதனால் அவரது குழந்தையைக் கவனித்துக்கொள்ளக்கூட கையில் காசில்லாத நிலை. அவரது தம்பி, பார் ஒன்றை நடத்திவருகிறார். அண்ணனின் கொள்ளைத்திட்டம் ஒன்று தோல்வியாக சிறைக்குச் சென்ற கோபம் அவரது மனதில் உள்ளது. அவரின் இடதுகையைக்கூட விபத்தில் பறிகொடுக்க,. கழிவுணர்ச்சியால் தினந்தோறும் கலங்கி வருகிறார். ஜிம்மியும் அவரது தம்பியும் ஒரே வீட்டில்தான் வசிக்கிறார்கள். இவர்களது தங்கை சலூன் ஒன்றில் வேலை செய்கிறார். துரதிர்ஷ்டம் துரத்தாத ஒரே ஆன்மா அவள் மட்டும்தான். இந்த நிலையில் வருமான பிரச்னையை சமாளிக்க ஜிம்மி, ஒரு வழியைக் கண்டுபிடிக்கிறான். அது கார் பந்தயம் நடத்தும் கம்பெனியின் பணத்தை கொள்ளையடிப்பதுதான். ஜிம்மியின் தம்பி கிளைட் லோகன், முதலில் அந்த திட்டத்தை நம்பவில்லை என்றாலும் அதனை மெல்ல விவரித்ததும் ஒப்புக்கொள்கிறான்.
இதற்காக இவர்கள் இருவரும் சென்று சிறையில் வால்ட் கொள்ளையன் ஜோ பேங்கை சந்திக்கிறார்கள். அவரிடம் பேசி ஒகே வாங்குகிறார்கள். அவர் அவரது இரு சகோதரர்களைப் பார்த்து பேச சொல்கிறார். இதற்கிடையே சுரங்கப்பணி வேகமாக நடைபெறுவதாக அங்கு செல்லும்போது நிறுவன மேனேஜர் மூலம் ஜிம்மிக்கு தகவல் தெரிய வருகிறது. இந்த நிலையில் அவர்கள் திட்டப்படி கார் பந்தயக்கம்பெனியை எப்படி கொள்ளையடித்தார்கள், போலீசிடம் மாட்டாமல் தப்பித்தது எப்படி என்பதுதான் கதை.
கொள்ளையடிப்பதுதான் முக்கியமான கதை. அதற்குள் அண்ணன், தம்பி, சகோதரி பாசம், குழந்தையை வளர்க்கமுடியாத தடுமாற்றம், தற்காலிக வேலையும் பறிபோன அவலம் என உணர்ச்சிகளை படம் நெடுக சரியாக விதைத்திருப்பதுதான் படத்தின் வெற்றிக்கு காரணம். பணத்தை திருடினாலும் தேவைக்கு எடுத்துவிட்டு இறுதியில் செய்யும் டிவிஸ்ட்தான் படத்தின் இயக்குநர் ஸ்டீவன் சோடர்பர்க்கின் பெயரைத் இணையத்தில் தேட வைக்கிறது.
படத்தில் நடித்துள்ள சானிங் டாடும் தொடங்கி ஆடம் ட்ரைவர், கேட்டி ஹோம்ஸ், டேனியல் கிரெய்க், ஹிலாரி ஸ்வாங் என அனைவருமே பிரமாதமாக நடித்திருக்கிறார்கள். படம் இறுதிக்காட்சியில் முடிவது போல தோன்றினாலும் முடியவில்லை என்பதை ஃஎப்பிஐ ஆபீசர் கிளைடின் பாரில் உட்கார்ந்திருக்கும் காட்சி சொல்லுகிறது.
உணர்ச்சிமயமான நேர்மையான கொள்ளையன்!
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக