விவசாய மசோதாக்களின் நன்மை என்ன தீமை என்ன? சுருக்கமான பார்வை

 

 

 

Buffalo, Farmer, Cultivating, Agriculture, Asia
cc

 

 

புதிய விவசாய மசோதா மக்களவையில் தாக்கலாகியிருக்கிறது. அதனை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் தாக்கல் செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்ஏடி கட்சியைச் சேர்ந்த நாடாளும்ன்ற உறுப்பினர் ஹர்சிம்ரத் கவுர்,  தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இவர் உணவு பதப்படுத்தல் துறையை நிர்வாகித்து வந்தார். சுசாந்த் சிங் விவகாரத்தில் பலரும் கவனிக்காத விஷயம், பஞ்சாபில் அரசுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வந்த போராட்டம்தான்.

இனி விவசாயிகள் தாம் உற்பத்தி செய்யும் பொருட்களை யாருக்கு வேண்டுமானாலும் விற்கலாம். அரசு அங்கீகரித்த மண்டி மட்டுமல்லாது வெளிமாநிலங்களிலும் கூட விற்கலாம். இனி அதற்கு எந்த தடையுமில்லை.

விவசாயிகளுக்கு சரியான விலை கிடைக்கவும், போக்குவரத்துவசதிகளும் கிடைக்க வழிவகை உள்ளது.

மின்னணு வர்த்தகத்தில் விவசாய உற்பத்திபொருட்களும் இனி இடம்பெறவிருக்கின்றன.

இனி அனைத்து விவசாய நிலங்களையும் பெரிய நிறுவனங்கள் குத்தகைக்கு பேசி முடிக்கலாம். முன்னரே தீர்மானித்த விலைக்கு விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்களை வழங்கவேண்டிவரும். முக்கியமான அம்சம், பெரு நிறுவனங்கள் இனி விவசாயத்தை வணிகமாக மாற்றுவார்கள். இதன்மூலம் விவசாயிகள் பயன்பெற வாய்ப்புள்ளது என்பதுதான்.

இந்தியாவில் சிறு, குறு விவசாயிகளின் எண்ணிக்கை 86 சதவீதம். எனவே, பெரும் நிறுவனங்களின் குத்தகை விவகாரங்களால் அதிகம் பயன்பெறுவது இவர்கள்தான்.

சந்தையில் விளைபொருட்களின் விலை குறைவது உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்கொள்வது விவசாயிகள் அல்ல. பெருநிறுவனங்கள்தான். எனவே விவசாயிகள் நிம்மதி பெருமூச்சு விடலாம்.

பிரச்னைகள் என்னென்ன?

மாநிலங்களுக்கு விவசாயிகள் பொருட்களை விற்கும் தேவை இல்லை என்பதால், கிடங்கு வரி மாநில அரசுகளுக்கு கிடைக்காது. வருவாய் இழப்பை சந்திக்க நேரிடும்.

இனி மத்திய மாநில அரசு விளைபொருட்களுக்கு குறைந்த விலை நிர்ணயம் செய்யமுடியாது. ஏறத்தாழ இந்த முறை இனி முடிவுக்கு வந்துவிடும்.

இ-நாம் எனும் வலைத்தளங்கள் மண்டி, கிடங்கு வசதிகளை பயன்படுத்தி வருகிறது. ஆனால் மண்டிகள் அழிந்துவிட்டால் இந்த விற்பனை கட்டமைப்பும் வீழ்ந்துவிடும் அபாயம் உள்ளது.

விவசாய வணிகமே முழுக்க மண்டியை விட்டு வெளியேறி இ வணிகமானால் கமிஷன் ஏஜெண்டுகள் பலர் வேலையிழப்பார்கள்.

குத்தகை விவசாயம் என்பதால் விவசாயிகள் அவர்கள் நிலத்தில் பயிரிடும் பயிரை தேர்ந்தெடுக்க முடியாது. மொத்த அதிகாரமும் பெருநிறுவனத்தின் கையில் இருக்கும்.

விதை, உரம், எதை பயிரிடுவது, என்ன விலை என்ற நிர்ணய உரிமை முழுக்க பெருநிறுவனங்களின் கையில் இருக்கும்.

வெங்காயம் விலை உயர்வை தடுக்க ஏற்றுமதி தடை போன்ற விஷயங்கள் இனி இருக்காது.

டைம்ஸ் ஆப் இந்தியா
விஷ்வ மோகன்
 

கருத்துகள்