அணுகுண்டு ஆராய்ச்சிக்கு முன்னாள் உளவாளியை கடத்திச்செல்ல முயலும் சதி! - ஒகே மேடம் - கொரியா
ஒகே மேடம்
கொரியா,
வடகொரியாவிலிருந்து தென்கொரியாவிற்கு வரும் முன்னாள் உளவாளி ஒரு பெண். அவரை தென்கொரிய அரசு பாதுகாக்கிறது. காரணம் அவரது தந்தை ஒரு அணு விஞ்ஞானி. இந்த பெண் மூலம் அணு குண்டுகளை தயாரிக்கும் பணியை வடகொரியா செய்ய நினைக்கிறது. ஆனால் உளவாளியாக இருந்த பெண், மெல்ல குடும்பத் தலைவியாகி பலகாரக்கடை நடத்தி வருகிறார்.
கிடைக்கும் பணத்தை கஷ்டப்பட்டு சம்பாதித்து ஒரு பெண் பிள்ளையைப் பெற்று படிக்க வைத்துக்கொண்டிருக்கிறார். அம்மாவின் ஜீன் ஸ்ட்ராங்காக பதிந்து இருப்பதால், சிறுமி பள்ளியில் சக மாணவர்களை புரட்டி எடுத்து விட்டே வீடு திரும்புகிறாள். அதேநேரம் அவளுக்கு பெற்றோர் தன்னை வெளியே எங்கும் கூட்டிச்செல்ல மாட்டேன்கிறார்கள் என்று வருத்தம் உள்ளது. அப்போது குளிர்பான நிறு்வனம் மூலம் ஹவாய் செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் அங்குதான் விதி குறிக்கிடுகிறது. அதே விமானத்தில் முன்னாள் உளவாளிப் பெண்ணை கடத்திச்செல்ல வடகொரியா ஆட்கள் வருகி்ன்றனர். அவர்களை எப்படி முன்னாள் உளவாளிப் பெண் சமாளித்து பிற விமானப் பயணிகளை காப்பாற்றுகிறாள் என்பதுதான் கதை.
படம் காமெடி, உணர்ச்சிகரமான நிகழ்ச்சிகள் என நிறைந்துள்ளது. படம் முழுக்க நாயகிக்கானது. அவர் இயல்பாக நடித்திருக்கிறார். உளவாளிகளின் வாழ்க்கை. துரோகம், திருமணம் என பல்வேறு விஷயங்களை அங்கங்கே குறிப்பிட்ட மாதிரி காட்டிவிட்டு இயக்குநர் நகர்ந்துவிடுகிறார். எந்த காட்சியிலும் அவர் அழகி என்பதை மறுக்கவே முடியாது. கடைசி காட்சியில் உள்ளி ட்விஸ்ட் ஜாலியானது.
யார் முன்னாள் உளவாளி என்று பார்வையாளர்களை அலைகழித்து வெகுநேரம் கழித்துதான் சொல்லுகிறார் இயக்குநர். ஆனால் நாயகியை அதிகநேரம் காட்டுவதால் ஏறத்தாழ பிளானில் அவர்தான் சண்டை போடப்போகிறார் என்பது உறுதியாகிவிடுகிறது.
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக