வருங்கால டெக் சாத்தியங்கள் என்ன?

 

 

Vr, Virtual, Virtual Reality, Technology, Reality
cc

 

 

 

எதிர்கால டெக் டிரெண்ட்ஸ்!

விர்ச்சுவல் ரியாலிட்டி

மேஜிக் லீப் என்ற நிறுவனம் சிஇஎஸ் நிகழ்வில் தன்னுடைய கண்டுபிடிப்பை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம்படுத்தியது. இந்த நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு நூறு கோடி ரூபாய். மினி கணினியை கண்ணாடி போல அணிந்துகொண்டு செயல்படலாம் என்று இந்த நிறுவனம் கூறுகிறது. இதில் கேமராவில் ஒளி எப்படி செயல்படுமோ அப்படி அதே விதத்தில் இதிலும் செயல்படுகிறது. நிஜ உலகில் அனிமேஷன் பாத்திரங்கள் வந்தால் எப்படியிருக்ககும்? நீங்கள் கதையில் படித்த பாத்திரங்கள் அப்படி உருவாகி உங்கள் குளிர்சாதனப்பெட்டி அல்லது ஜன்னல் ஓரம் நிற்கும் மேஜிக் லீப் நிறுவனம் தனது கண்ணாடியின் விலை என்னவென்பதை இன்னும் சொல்லவில்லை. இது மட்டுமல்ல, ஹெச்டிசியின் விவே புரோ, லூக்ஸிட் விஆர், வூஸிக்ஸ் சிஸ்டம், எக்ஸ் 1- தேர்ட் ஐ என ஏராளமான விர்ச்சுவல் ரியாலிட்டி ஐட்டங்கள் சிஇஎஸ் விழாவில் காட்டப்பட்டன. இந்த தொழில்நுட்பம் விளையாட்டுகளை இன்னும் நிஜமாக விளையாடுவது சாத்தியமாக்கலாம்.

கிரிப்டோகரன்சி

இன்று உலக நாடுகளின் மத்திய வங்கி அங்கீகரித்தாலும் அங்கீகரிக்காவிட்டாலும் கூட பிட்காயின் வணிகம் இணையத்தில் சீரும் சிறப்புமாக நடந்து வருகிறது. இன்று ஏறத்தாழ ஆயிரம் வகையான கிரிப்டோகரன்சிகள் புழக்கத்தில் உள்ளன. இதில் ஏமாற்றங்களை தவிர்க்க பிளாக்செயின் முறையில் லெட்ஜர்  ஒன்றுண்டு. நடைபெறும் அனைத்து பணபரிமாற்றங்களு்ம இதில் எழுதப்படும். மரபான வங்கிகள் கூட இப்போது கிரிப்டோ கரன்சியை பயன்படுத்தலாமா என காசு சுண்டிப்போட்டு பார்த்து வருகின்றன. டிஜிட்டல் முறையிலான பணப்பரிமாற்றம் என்பதால், கிரிப்டோகரன்சிகள் பாதுகாப்பானவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதிக நாட்களுக்கு டெபிட், கிரடிட் கார்டுகள் செயல்பாட்டில் இருக்காது.


குவாண்டம் கணினிகள்

உலகளவில் அதிக திறன் வாய்ந்த கணினிகள் உருவாக்கப்படும் ஆராய்ச்சிகள் தொடர்ந்து வருகின்றன. இன்டெல் நிறுவனம், சிஇஎஸ் விழாவில் 49 க்யூபிட் குவாண்டம் கணினியை உருவாக்கி வருவதாக கூறியது. இதன் மூலம் மைக்ரோசிப் போன்றவற்றின் விலை பெருமளவு குறைய வாய்ப்புள்ளது. கால்டெக் நிறுவன ஆராய்ச்சியாளர்கள் குவாண்டம் கணினிகளில் ஒளியைப் பயன்படுத்தி தகவல்களை சேமிப்பது பற்றி முயன்று கொண்டிருக்கிறார்கள்.

இவை மட்டுமல்லாது மனிதர்களைப் போன்றே சிலிகான் கணினிகளை உருவாக்கிவருகிறார்கள். இந்த கணினிகள் அப்படியே மனிதர்களைப் போன்ற தன்மையில் இயங்குமாம். ஸ்டீவ் ஃபர்பரின் ஸ்பின்னாக்கார் என்ற கணினி நூறு கோடி நியூரான்களைக் கொண்டது. பல்வேறு புற்றுநோய்களை அறியும் பாக்டீரியாவை இம்முறையில் உருவாக்கவும் ஆராய்ச்சிகள் பரபரக்கின்றன. இதுவும் பின்னாளில் நடைபெறலாம். அனைத்து மக்களும் வாங்க முடியும் அளவுக்கு  சூப்பர் கணினி என்பது இன்னும் பல பத்தாண்டுகளில் சாத்தியமாகலாம்.

bbc


 

கருத்துகள்