நூறுவயது வரை வாழ என்ன செய்யலாம்?

 

 

 

 

 

Hundred, One Hundred, 100 Year Celebration, 100 Years
cc


 

 

 

நூறு வயது வாழ்வது எப்படி?

சாப்பிடு குடி கொண்டாடு

உதவியாக நண்பர்கள் ஆதரவாக குடும்பம் என்று இருப்பது நெருகடியாக சூழலில் மனிதர்களின் ஆயுளை நீட்டிப்பதாக பிரகாம் யங் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதிக நண்பர்கள் உறவின்றி, உறவுகளின் அண்மையின்றி இருப்பவர்களை விட 50 சதவீதம் அதிக ஆயுளுடன் ஒருவர் வாழ சமூகத்தோடு பழகி வருவது முக்கியம். ஆயுள் நீள மனச்சோர்வை போக்குவது முக்கியமான அம்சம்.

சிந்தனைகள் முக்கியம்

நூறுவயது ஆனவர்களின் இளமைப் பருவத்தை ஆராய்ந்தபோது அவர்கள் அனைவரிடம் பேசி பழகிய தன்மை கொண்டவர்கள் என்று தெரியவந்துள்ளது. வாழ்க்கையில் குறிப்பிட்ட நோக்கம் என்று உழைப்பவர்களுக்கு எதிர்மறை சிந்தனைகள் மனதில் தோன்றாது. எனவே, பரபரவென உழையுங்கள். உழைத்து ஓய்ந்தபிறகு உறங்குங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும் என ஜாமா சைக்கியாட்ரி இதழ் ஆய்வு கூறுகிறது.

ஓடினால் வாழலாம்.

ஒருமணிநேரம் டிவி பார்த்தால் உட்கார்ந்துதான் பார்க்கவேண்டும். இதனால் ஆயுளில் 22 நிமிடங்கள் குறைகிறது என்கிறார்கள். 25 வயதுக்குப் பிறகு முடிந்தளவு காலை அல்லது மாலையில் சாலையில் ஓடுங்கள். யோகா அல்லது உடற்பயிற்சி செய்யுங்கள். வயதாகும்போது நீரிழிவு, உடல்பருமன், இதயநோய், புற்றுநோய் ஆகியவை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. முதலிலேயே பயிற்சிகளை தொடங்கிவிட்டால் பிறரை விட ஆரோக்கியத்தில் கெட்டியாக இருக்கலாம்.

சோறு முக்கியம்!

எலிகளுக்கு கலோரி குறைந்த டயட்டை கொடுத்தபோது அவற்றின் வாழ்நாள் நீண்டது. எனவே, ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகளில் வாழ்ந்தவர்களின் உணவுப்பழக்கத்தை கவனித்தபோது லைட்டாக சாப்பிட்டு அதிக நாட்கள் வாழ்ந்திருப்பது தெரிய வந்தது. எனவே பதப்படுத்தப்பட்ட உணவுகளை குறைவாக சாப்பிட்டு வந்தால் ஆயுள் கூடும்.

தூக்கம்

இரவு தூக்க்ம 6.5 அல்லது 7.5 மணிநேரம் தூங்கியவர்கள் அதிக நாட்கள் வாழ்ந்து வந்தது தெரிய வந்திருக்கிறது. அனைவராலும் இதை கடைபிடிக்க முடியாது. எனவே தூங்கும் நேரத்தை நிலையாக ஒரே மாதிரி பராமரிப்பது உடலுக்கு முக்கியம்.

பிபிசி 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்