டெக் டிரெண்ட்ஸ் - சூரியக்குளியல் போடவும் டைம் ஷெட்யூல் போட்டுக்கொள்ளலாம்

 

 

 

Woman, Sunbathing, Umbrella, Sand, Beach, Sunshade, Sun
cc

 

 

 

 

டெக் டிரெண்ட்ஸ்

பயணம் புதிது!

தெலுங்கில் பாலைய்யா கூட ப்ளூடூத் சூட்கேஸைப் படத்தில் பயன்படுத்திவிட்டார். இதைப்பற்றி வேறு நாம் என்ன சொல்ல? அழகிய மேல்தட்டு யுவதிகள் பவனிவரும் வெஸ்பா பைக்கை உருவாக்கி இத்தாலிய கம்பெனியான பியாஜியோ அவர்களுக்கு ஏற்றாற்போல சூட்கேஸ் ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள். ஏர்போர்ட் போனால் கூட அங்கிருக்கும் அடையாளங்களை புரிந்துகொண்டு உங்கள் பின்னால் செல்ல  நாய்க்குட்டி போல கூடவே வரும்.

சூரிய குளியல் போடுவது நல்லதுதான். ஆனால் புற ஊதாக்கதிர்கள் பாதித்தால் திராவிட நிறம் திகைக்கவைக்கும் நிறமாகிவிடும் ஆபத்து உண்டு. எனவே இதற்காக லோரியல் ஒரு சென்சாரை உருவாக்கியுள்ளது. இதனை நகத்தில் பொருத்திக்கொண்டு சொம்பை உருட்டி விட்டது போல சிரித்துக்கொண்டு கடலில் சன் பாத் எடுக்கலாம். வெளியிலின் அளவு அதிகமாகிவிட்டால், உடனே சென்சார் போனுக்கு தகவல் அனுப்பி, அலர்ட் கொடுத்து எந்திரிங்க மேடம் என்று செய்தி சொல்லுமாம். தோலில் பட்டாலே வெயில் கடுமையாக இருக்குதுன்னு தெரியுமே? ன்னு விவரமாக கேள்விகள் கேட்டு கமெண்ட் அடித்தாலும் அதை நாங்கள் காம்ளிமெண்டாகவே எடுத்துக்கொள்வோம்.

ஸ்மார்ட்போனில் பிங்கர் பிரிண்ட் வசதியைப் பயன்படுத்தி ஆட்காட்டி விரலை தேய்த்துக்கொண்டவர்கள்தானே நாம். இப்போது விவோ புதிய பிங்கர் பிரிண்டை கொண்டு வந்துள்ளது. இதில் போனில் ஹோம் எனும் ஐகான் உள்ள இடத்தில்  எச்சிலைத் தொட்டு கைரேகை வைத்து அதனை இயக்கலாம். இதனை லேப்டார், ஏஐ பொருட்களில் இணைத்து பயன்படுத்தலாம் என்பதுதான் புது விஷயம்.

உடற்பயிற்சியைப் பொறுத்தவரை மக்களை ஆரோக்கியத்திற்காக டெக் நிறுவனங்கள் அளவுக்கு யாரும் மெனக்கெட முடியாது. அவர்களின் பர்சிலுள்ள அனைத்து காசையும் பிடுங்கிக்கொள்ள ஏராளமான மானிட்டர்கள், வாட்சுகள்,ஆ ப்கள் இணையத்தில் உள்ளன. ஹாலோ ஸ்போர்ட் என்ற நிறுவனம் ஹெட்போன் ஒன்றைத் தயாரித்துள்ளது. இதை அணிந்துகொண்டால் தலையிலுள்ள நியூரான்கள் புத்துணர்ச்சி பெறுமாம். அதிலுள்ள முட்கள் போன்ற அமைப்புதான் இதற்கு காரணம்.

அடுத்து, பிங்காம்டன் பல்கலைக்கழகத்தில் பயோபேட்டரி ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். நூல் இழை சார்ந்து பாக்டீரியாவின் சக்தி கொண்ட பேட்டரி இது. சூடோமோனாஸ் அருஜினோசா என இதனைக் குறிப்பிடலாம். நூலிழை பேட்டரியை விட பாக்டீரியா பேட்டரி சிறப்பாக வேலை செய்வதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதனால் வெளியே நடைபாதையில் ஜாக்கிங் செய்யும்போது உடல் வியர்வை மூலம் எளிதாக போனை சார்ஜ் போட்டுக்கொள்ள முடியும்.

 

bbc
 

கருத்துகள்