மக்களைப் பட்டினியிலிருந்து காப்பாற்ற கூலிப்படைத்தலைவனிடம் மோதும் முன்னாள் குற்றவாளி! - அன்னோன்

 

 

 

 

அன்னோன் 2011

 

 

அன்னோன் 2011

Director:

Jaume Collet-Serra

Writers:

Oliver Butcher (screenplay), Stephen Cornwell (screenplay)



டாக்டர் மார்ட்டின் ஹாரிஸ் விபத்தில் அடிபட்டு கோமாவில் கிடக்கிறார் நான்கு நாட்கள் கழித்து விழிக்கிறார். ஹோட்டலுக்கு வந்து பார்த்தால் மனைவியுடன் வேறொருவர் அவர் பெயரில் சரச சல்லாபம் செய்கிறார். இவரை இவரது மனைவி கண்டுகொள்ளவில்லை. தன் அடையாளத்தைச் தேடி ஹூ ஆம் ஐ என நாயகன் அலைவதுதான் படத்தின் கதை.

படம், அதன் இறுக்கமான அழுத்தம் தரும் கதை முடிச்சுகளால் சுவாரசியப்படுத்துகிறது. பாஸ்போர்ட் உள்ள பெட்டியை ஏர்போர்டில் விட்டுவிடும் டாக்டர் மார்ட்டின் அதைப் தேடிப்போய் விபத்தில் சிக்கி கோமாவுக்கு போகிறார். அதிலிருந்து மீண்டு தன் அடையாளத்தை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் முக்கியமான பகுதி.

மரபணு மாற்ற சோளம் பற்றிய ஆராய்ச்சி,  பசியைப் போக்குவது என சமூக அக்கறையை இம்மியூண்டு எடுத்துக்கொண்டு கூலிக்கொலைகார ர்கள் பற்றி விரிவாக பேசியிருக்கிறார்.

லியாம் நீசன், ஜினாவாக வரும் டயானா, லிஷ்ஷாக வரும் ஜூன் ஜோனாஸ் ஆகியோர் நன்றாக நடித்திருக்கிறார்கள். படம் தொடங்கியது முதல் முடிவது வரை  நாயகனின் அடையாளம் தேடும் முயற்சி சலிக்கவே இல்லை. மார்ட்டினின் மூளையிலுள்ள மெமரி சர்க்கியூட் முழுக்க சேதமடைவதால், படம் பார்க்கும் நமக்கும அதேநிலைமதான் ஏற்படுகிறது. உண்மையில் அவர் யார், அவருக்கு எதிராக ஜெர்மனியில்  சதி செய்பவர்கள் யார் என்பதையெல்லாம் அறிந்துகொள்வது இறுதிப்பகுதி.

அறிந்தும் அறியாமலும்

கோமாளிமேடை டீம்


கருத்துகள்