நடிப்பை விட தனிப்பட்ட வாழ்க்கைக்காக அதிகம் பேசப்பட்ட ஆங்கிலப்பட நடிகர்! லியனார்டோ டிகாப்ரியோ
டிகாப்ரியோ |
டிகாப்ரியோ
டக்ளஸ் விட்
ஆங்கிலத்தில் எழுதப்பட்ட லியனார்டோ டி காப்ரியோவின் வாழ்க்கைக் கதை.
ஜெர்மனை மூதாதையர்களாக கொண்டவர் லியோ. அவரின் ஹிப்பி அப்பா, உழைக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்ட அம்மா என இருவருடனும் வந்து அமெரிக்காவில் லியோ எப்படி ஜெயித்தார் என்பதுதான் நூலின் முக்கியமான பகுதி.
பால்ய வயதில் லியோ பல்வேறு டிவி தொடர்களில் நடித்து சம்பாதித்துதான் குடும்பத்தை காப்பாற்றுகிறார். அதில் கிடைத்த பணத்தை வைத்துதான் கொஞ்சம் நல்ல சூழல் கொண்ட வீட்டுக்கு மாறுகிறார். அவரின் இயல்பு, பள்ளியில் நடந்துகொள்ளும் விதம், டிவி ஆடிஷன்கள் , அவரின் அப்பா பற்றிய லியோவின் உணர்வுகள் என நிறைய விஷயங்களை பதிவு செய்யப்பட்டுள்ளன.
பெரும்பாலானா லியோ பேசிய பதிவுகள் அனைத்தும் ஊடகங்கள் வந்தவைதான் தொகுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 27 அத்தியாயங்கள்.. குடும்பத்திற்கான வருமானமே லியோவின் நடிப்பு மூலம் கிடைக்கிறது. 1995க்குப் பிறகு லியோவின் வாழ்க்கை முறையே மாறுகிறது. டைட்டானிக் படம் வந்தபிறகு அவரின் சினிமா மார்க்கெட்டும் உயருகிறது.
இந்த நூல் லியோவின் நடிப்பை மதிப்பிடுவதை விட ஆஸ்கர் விருதுக்கான் ஆசையை அதிகம் பேசியுள்ளது. மற்றொன்று பார்ட்டியை கொண்டாடும் பிம்பமாக லியோ உயர்த்தி காட்டப்பட்டுள்ளார். ஆஸ்கர் பட விருதுகளை ரெவ்னென்ட் படத்திற்கு வாங்கும் முன்னரே , ஹாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கிய நடிகர் லியோதான். விருது என்ற அங்கீகாரம் பெறமுடியாமல் இருப்பதை ஊடகங்கள் அவரின் பெரிய ஏமாற்றமாக காட்சிபடுத்தின. என்ன உளவியலோ, டைட்டானிக் படம் முடிந்தபிறகு சில மோசமான படங்களில் நடித்தார். ஆனால் இதற்குப் பிறகு கதைகளை தேர்வு செய்வதில் நிதானம் காட்ட்த தொடங்கினார். இதன் காரணமாகவே லியோவின் தனித்துவமான படங்கள் உருவாயின. டைட்டானிக் படம் மூலம் கிடைத்த புகழை விட கேட்வின்ஸ்லெட்டின் நட்பை லியோ முக்கியமானதாக பார்த்தார். கேட்டின் நட்பு இன்றுவரை தொடர்ந்துவருவதே அதற்கு சாட்சி.
லியோ செய்யும் செயல்களை விட அவரைப் பற்றிய கிசுசிசு எழுதும் பத்திரிகைகளின் பக்கமே எழுத்ததாளர் சாயந்துவிட்டாரோ என எண்ணும்படி அவரின் பார்ட்டி கிசுகிசுக்களே நூலில் 50 பக்கம் வந்துவிடும் போல.
லியோ சிறந்த கதைகளை கொண்ட படங்களுக்காக தனது சம்பளத்தைக் கூட சொற்பமாக சுருக்கிக்கொண்டவர். இன்றுவரை இயற்கை சார்ந்த பல்வேறு பணிகளுக்கு தன்னுடைய பௌண்டேஷன் மூலம் நிதியுதவி செய்துவருகிறார் லியோவின் பல்வேறு குணவியல்புகள் நூல் முழுக்க விவாதிக்கப்படுகின்றன.
இவற்றையெல்லாம் தாண்டி நூலை படித்தால் சினிமா மீதான லியோவின் ஆர்வத்தை நிச்சயமாக அறியமுடியும்.
komalimedai team
கருத்துகள்
கருத்துரையிடுக