சீனாவுடன் பிரச்னைகள் ஏற்பட்டாலும் அதனை தவிர்க்கமுடியாது! - வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்

 

 

NSG bid is developmental aspiration, don't give it ...
வெளியுறவுத்துறை அமைச்சர்
எஸ்.ஜெய்சங்கர்

 

 

வெளியுறவுத்துறை அமைச்சர்
எஸ்.ஜெய்சங்கர்

முந்தைய அரசு கடைபிடித்த வெளிநாட்டு கொள்கைகளுக்கும் இப்போதையை அரசு கடைபிடிக்கும் கொள்கைகளுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

இன்று உலகம் நிலையில்லாது மாறிவிட்டது. அதனால் அதற்கேற்ப நாம் வெளியுறவுக் கொள்கைகளை கடைபிடிக்க வேண்டியதிருக்கிறது. அமெரிக்கா தன்னை மாற்றிக்கொண்டிருக்கிறது. சீனாவின் ஆதிக்கம் வளர்ந்துவருகிறது. ஐரோப்பிய நாடுகளின் செயல்பாடுகளிலும் மாறுதல்கள் தொடங்கிவிட்டன. மிகவும் ஊக்கம் கொண்ட நாடாக ரஷ்யா, ஜப்பான் ஆகியவை உள்ளன. மத்திய கிழக்கு நாடுகளி்ன் அதிகாரம் மாறி வருகிறது. இதற்கேற்ப இந்திய வழியில் நாம் நடைபோட்டால்தான் நெ.1 அந்தஸ்தை நாம் அடைய முடியும். உள்நாட்டு தீவிரவாதம், வறுமை, பொருளாதார வளர்ச்சி என பல்வேறு அம்சங்களோடு போராட வேண்டியுள்ளது. கடல் பாதுகாப்பு, எல்லைகள் ஆகியவற்றைப் பொறுத்தவரை இலங்கை, மொசாம்பிக், நேபாளம், ஏமன் ஆகிய நாடுகள் முக்கியமானவை. நாம் பல்வேறு நாடுகளுக்கு கோ்விட் -19 நோய்த்தொற்றுக்கு மருந்துகளை அனுப்பி உதவியுள்ளோம். இந்தியா தேசிய அளவிலும், உலக அளவிலும் தெற்காசியாவில் முக்கியமான நாடு என்பதை எப்போதும் உணர்த்தியே  வந்திருக்கிறது.

சீனாவுடன் கொண்டுள்ள உறவு கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவு சீர்கெட்டுள்ளது. நீங்கள் நூலில் குறிப்பிட்டுள்ளபடி சீனாவுடனான பேச்சுவார்த்தை பெரும் சவாலாக இருந்துள்ளதாக கூறியுள்ளீர்களே?

ஊடகங்கள், நாங்கள் இப்போது நடத்தும் பல்வேற கட்ட பேச்சுவார்த்தைகள் மூலம் அனைத்து பிரச்னைகளும் ஒரே நாள் இரவில் தீர்ந்துவிடும் என நினைக்கிறார்கள். சீனாவுடன் இந்தியாவுக்கு எத்தனை பிரச்னைகள் இருந்தாலும், அந்த நாடு பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த நாடு. சீனாவுடன் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்கள் எல்லையில் அமைதியை கொண்டு வரும் என எண்ணுகிறேன்.

பாகிஸ்தான் நாட்டுடன் உறவு சீராக இல்லையே ?

ஏன் என்றா கேட்கிறீர்கள்? புல்வாமா, பதன்கோட், உரி தாக்குதல்கள் உங்களுக்கு நினைவிருக்கிறதா? இந்த நிலையில் அவர்களுடன் நாம் எந்த அடிப்படையில் பேசுவது? பிரிவினைக்கு பிறகான பாகிஸ்தான் வேறு மாதிரி உருவானது. இப்போது அந்நாடு முழுக்க தீவிரவாதம் சார்ந்தே இயங்கி வருகிறது. இ்ந்தியா இனி தனது வழியில் செயல்படும்.

அண்டை நாடுகளுடனான உறவு பற்றி பெருமையாக பேசுகிறீர்கள்? ஆனால் நேபாளம், வங்கதேசம் ஆகிய இரு நாடுகளுடனான உறவு சீராக இல்லையே?

நேபாளம் நாட்டிற்கு இந்தியா மின்சாரம் , எரிபொருள் சேவையை அளிக்கிறது. வங்கதேசம் நாட்டிற்கு ரயில், எரிபொருள், மின்சாரம் ஆகியவற்றை அளித்து வருகிறது. இந்த உதவிகள் அந்த நாட்டின் வசதிகளை மாற்றியுள்ளது. இன்று இந்தியாவைச் சுற்றியுள்ள அண்டை நாடுகள் பாதுகாப்பு சார்ந்த விவகாரத்தின் உணர்ச்சிகரமாக உள்ளன. அதனால்தான் பல்வேறு கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றன.

உள்நாட்டில் பொருட்களை தயாரிக்கு்ம ஆத்மான்நிர்பார் பாரத் திட்டமும், உலகளவில் பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்து வரும் நிலைமைக்கும் வேறுபாடுகள் உள்ளனவே?

இரண்டு விஷயங்களுக்கும் பெரிய வேறுபாடுகள் கிடையாது. காரணம், நான் உள்நாட்டில் பல்வேறு தொழிற்சாலைகள், உற்பத்தியை அதிகரித்தால் பிற வெளிநாட்டு நிறுவனங்கள் நம் நாட்டிற்கு முதலீடு செய்ய வருவார்கள் என்று கூறுகிறேன். இதனால் உள்நாட்டு கட்டமைப்புகள் வலிமை பெறும். அதனைப் பயன்படுத்திக்கொள்ளும் வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் நிதியும் கிடைக்கும்.

india today




 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்