காதலைச் சேர்த்து வைக்கும் பறவை! - லவ்பேர்ட்ஸ் 2011
லவ் பேர்ட்ஸ் 2011 |
லவ் பேர்ட்ஸ்
2011
படம் நியூசிலாந்தில் தயாரான படம்.
Directed by | Paul Murphy |
---|---|
Produced by | Alan Harris Matthew Metcalfe |
Written by | Nick Ward |
Starring | Rhys Darby Sally Hawkins Bryan Brown |
Music by | Tim Prebble |
Cinematography | Alun Bollinger |
லவ் பேர்ட்ஸ் 2011 |
அரசின் ப்ளூகாலர் வேலை ஒன்றில் இருக்கிறார் நாயகன். அவருடைய காதலி அவரை சுத்த வேஸ்ட் என்று சொல்லிவிட்டு அடுத்த ஆளைத் தேடி போய்விடுகிறாள். இவர் அந்த வருதத்தில் இருக்கிறார். அப்போது அவருடைய வீட்டுக்கூரை மீது நீர்ப்பறவை ஒன்று அடிபட்டு வீழ்கிறது. அதனை எப்படி வளர்ப்பது என்று நாயகனுக்கு புரியவில்லை. அதற்காக அருகிலுள்ள வனவிலங்கு காட்சியகத்திற்கு சென்று வருகிறார். அங்கு வேலை செய்யும் பெண்ணுடன் பழக்கம் ஏற்படுகிறது முதலில் பிடிகொடுத்து பேசாத அம்மணி மெல்ல மனம் திறக்கிறார். அவருக்கு மணமாகி இரு பிள்ளைகள் உள்ளனர். ஒருவருக்கொருவர் மனசுக்குள் காதல் இருந்தாலும் சொல்ல தயங்குகின்றனர். இந்த நேரத்தில் நீர்ப்பறவையும் மெல்ல உடல் தேறுகிறது. இவர்களும் காதல் பறவை ஆனார்களா இல்லையா என்பதுதான் கதை.
எல்லோரும் செல்லப்பிராணி ஒன்றை வளர்த்த நாயகன் நீர்ப்பறவை ஒன்றை வளர்க்கிறார். அதன் மூலமே நாயகியுடன் பழக்கம் ஏற்படுகிறது. உணர்வுபூர்வமாக உறவு அப்பறவையுடன் நாயகனுக்கு ஏற்படுகிறது. இறுதியில் அப்பறவை , உயிர் தப்பிக்க பறந்து வானில் செல்லும்போது கூட நாயகனுக்கு காதல் வலியை அதிகம் வலிக்கிறது.
நாயகி சாலி ஹாகின்சன் பிரமாதப்படுத்தியிருக்கிறார். மெல்லிய அலட்டல் இல்லாத மனதில் தோன்றிய காதலை வெளிப்படுத்தவேண்டும். எப்படி படத்தில் சாலி அதனை நெஞ்சுக்கு நெருக்கமாக நடித்து காண்பித்திருக்கிறார். அவரும் அவரது மகள், மகன் பற்றிய காட்சிகள் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளன.
உணர்ச்சிமயமான கிளைமேக்ஸ் முத்தக்காட்சிகளை மறக்காமல் பாருங்கள்.
படம் எம்எக்ஸ் பிளேயரில் கிடைக்கும்.
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக