இடுகைகள்

மாந்த்ரீகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நல்லவர், கெட்டவர் யார், எங்கிருக்கிறார்கள் என்பதை புரிய வைக்கும் கிராமத்து சிறுமி -

படம்
    தி ஸ்கூல் ஆஃப் குட் அண்ட் ஈவில்   ஒரு கிராமம். அங்கு சோபியா என்ற சிறுமியும், அகதா என்ற சிறுமியும் நண்பர்களாக வாழ்கிறார்கள். இதில் சோபியாவுக்கு கிராமத்தில் வாழ்வதில் விருப்பமில்லை. தனித்துவம் கொண்டவள் என அவளது அம்மா சொன்னது சோபியாவுக்கு அடிக்கடி மனதில் ஒலிக்க, பகல் கனவு கண்டபடி வாழ்கிறாள். கிராமத்திலுள்ள சுடுகாட்டின் அருகில் வாழ்கிறாள் அகதா. அவளது அம்மா, மந்திரவாதிக் குடும்பத்தைச் சேர்ந்தவள். அவளை மந்திரவாதி ஆக்குவதுதான் அவளது லட்சியம்.   ஆனால் அகதாவுக்கு   அமைதியாக வாழ்ந்தால் போதும் என்று இருக்கிறது. இந்த நேரத்தில் சோபியாவுக்கு புத்தக கடையில் உள்ளவர், மந்திரப் பள்ளி பற்றி சொல்லுகிறார். எனவே, அவள் தான் எப்படியாவது மந்திரப்பள்ளிக்கு சென்று இளவரசியாகி சந்தோஷமாக இருக்கவேண்டும் என நினைக்கிறாள். இதை வேண்டுதல் மரத்தில் எழுதி வைக்கிறாள். ஆனால் அகதாவுக்கு சோபியா தன்னை விட்டு செல்வதில் விருப்பமில்லை. கிராமத்தில் அவள்மீதும், அவளது அம்மா மீதும் பாசம் காட்டுபவள் சோபியா மட்டும்தான். பிறர் அவளை மந்திரவாதி என்று சொல்லி தீயிட்டு எரிக்க நினைக்கிறார்கள். சோபியா எங்கு சென்றாலும் தானும் வருவேன் எ

நிதானமான ஆவி! - பழிக்குப்பழியில் வருகிறது கொட்டாவி

படம்
சௌபர்ணிகா - கோட்டயம் புஷ்பநாத் தமிழில் - சிவன் விலை - 65 சின்னத் திருமேனி ஸ்ரீகுமார், எலும்புக்கூடு ஒன்றை கல்லூரி லேபில் ஒன்று சேர்க்கிறார். இதன் விளைவாக சக்தி பெறும் ஆத்மா அவரை எதிரிகளை பழிவாங்க உதவக்கோருகிறது. அதற்கு அவர் இசைய, நேரும் பல்வேறு பிரச்னைகள், ஹோமங்கள், ஏவல்கள், பில்லி சூனியங்கள்தான் கதை. முழுக்க யூ சர்டிபிகேட் கதை. ஸ்ரீதேவி எனும் பெண் சொத்துக்காக்க சந்து நாயரால் கொல்லப்படுகிறார். அதற்கு பழிவாங்க ஸ்ரீகுமாரைப் பயன்படுத்துகிறார். ஸ்ரீகுமார், நம்பூதிரி குடும்பம் என்றாலும் அவருக்கு மாந்த்ரீகத்தில் அனுபவமில்லை. எனவே, அவரின் குலதெய்வமான பகவதி தன் சக்தியை அவருக்கு கொடுத்து உதவுகிறாள். அது என்ன? அவரின் எதிரிகள் யார்? என்பதுதான் கதை. காதல், செக்ஸ் இல்லாத கதை என்பதால் கதையில் பெரிய வேகம் இல்லை. எதிரிகளின் நோக்கம் சொத்து என்பது ஓகே. அதனைக் காப்பாற்றுபவருக்கு அதன் மீதான தீவிர மோகம் இல்லை என்பதால், கதை பாதியில் நொண்டியடிக்கிறது. ஸ்ரீதேவியின் ஆவி கூட நாளைக்கு பழிவாங்கிக்கொள்ளலாம் என்று நிதானமாக இருப்பது கதையினை நீட்டிக்க என்றே புரிந்துகொள்ள முடிகிறது. சன்டிவியில் திகில்