இடுகைகள்

அறிகுறிகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அறிகுறிகளை வைத்து நோய்களை கணிக்கும் முறை - அவசர சிகிச்சை மருத்துவம்

படம்
  நோயாளியின் குடும்பம் மற்றும் சமூக வாழ்க்கை பற்றிய குறிப்புகள் முக்கியமானவை. இவற்றை நாம் அறிந்தால் அவருக்கு எளிதாக சிகிச்சை செய்ய முடியும்.   குடும்ப விவரங்களை அறிவது எதற்கென்றால், நோயாளியின் குடும்பத்தில் பாரம்பரியமாக சில நோய்கள் உருவாகி வந்திருக்கலாம். அதை தெரிந்தால் அதற்கேற்ப சிகிச்சை அளிப்பது எளிது. இதய நோய்கள், த்ரோம்போயம்போலிக் நோய், குடல்வால், பித்தப்பை நோய், புற்றுநோய் ஆகியவை குடும்ப ரீதியாக ஏற்படும் நோய்கள். எனவே, இவற்றை ஆராய நோயாளி கூறும் விவரங்கள் அவசியம்.   மதுப்பழக்கம், புகையிலை பயன்படுத்துகிறாரா, போதைப்பொருட்கள் பழக்கம், திருமணம் ஆனவரா, நரம்பியல் ரீதியாக பாதிப்பு ஏதேனும் உள்ளதா என ஆராய்வதும் முக்கியமானது. இதையொட்டி கேட்கப்படும் கேள்விகளைப் பார்ப்போம். வலி எப்போது தொடங்கியது? வலி தொடங்கும்போது என்ன வேலை செய்துகொண்டிருந்தீர்கள்.? வலியின் உணர்வு எப்படி இருக்கிறது? இதற்கு முன்னர் இப்படி வலி ஏற்பட்டிருக்கிறதா? வலிக்கான அளவுகோலாக 0 லிருந்து பத்துக்குள் ஒரு எண்ணைச் சொல்ல முடியுமா? வலிக்கான காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்? உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு