இடுகைகள்

தற்செயல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒருவரை நினைத்தால் அவரை பார்க்கமுடிவது தற்செயலானதா? டெலிபதி உண்மையா? பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
        telepathy pxhere         டெலிபதி என்பது உண்மையா? சக்திமானில் கங்காதர் கூட கீதா விஸ்வாசிடம் டெலிபதியில் சில செய்திகளை பகிர்வார். ஆனால் இது உண்மையா என்றால் அறிவியல் ஆதாரங்கள் இதற்கு ஏதும் இன்றுவரை வரை கிடையாது. இஎஸ்பி என்பது ஐம்புலன்களை கடந்த ஒன்று. கிளார்வயன்ஸ்  என்பது குறிப்பிட்ட இடம் பற்றிய செய்தியை அறிந்து சொல்வது. இது இயல்பான மனிதரின் திறனுக்கு அப்பாற்பட்டது. டெலிபதிக்கான உதாரணங்களுக்கு அமெரிக்கா, ஐரோப்பா இம்முறை செல்லவேண்டாம். நீங்கள் சந்தித்து பேசி பத்தாண்டுகள் இருக்கும் எனும்படியான நபரை திடீரென நினைப்பீர்கள். அடுத்த ஐந்து நிமிடத்தில் உங்களுக்கு வரும் போன் அழைப்பில் அதே நண்பர் உங்களை அழைத்து நலம் விசாரிப்பார். இவரை சந்திப்போமா என்று நினைத்துக்கொண்டு இருப்பவரை ஹைப்பர் மார்க்கெட்டில் சந்தித்து குஷியாவீர்கள். உறவினர் ஒருவரை சந்திக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே கதவைத் திறப்பீர்கள். எதிரே புன்னகையுடன் அவர் நிற்பார். இதுபோலான சம்பவங்கள் பலரது வாழ்க்கையிலும் குறிப்பிட்ட காலத்தில் நடந்திருக்கும். இதனை தற்செயலாக கருதுவதா, அதிசய சக்தி ஒருவருக்கு கிடைத்துள்ளதாக என்றெல்லாம் கூறமுடியா

தற்செயல் என்பதை நம்பலாமா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? @ மிஸ்டர் ரோனி தற்செயல் என்பதை நம்பலாமா? பொதுவாக இதனை நிகழ்தகவு என்ற வகையில் புரிந்துகொள்ளலாம். ஒரே நாளில் சிலருக்கு பிறந்தநாள் வருவது, குறிப்பிட்ட தினத்தில் ஒரே கலரில் டிரெஸ் போட்டு வருவது, ஒரே யோசனையை இருவரும் முன்வைப்பது என எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இதனை எண்கள், நாள், குணம் என தொடர்புபடுத்தாதீர்கள். அது நமக்கு சிக்கலையே தரும். ஒன்றுபோல இரு கார்கள் நிறுத்தப்பட்டிருப்பது, ஒரே டிசைன் போன்ற கவுன்களை பெண்கள் அணிந்து ஷாப்பிங் மாலில் சந்திப்பது என்பது தினமும் நாம் பார்த்து வருவதுதானே? ஆனால் தனித்தன்மையை விரும்புபவர்கள் நிச்சயம் தற்செயலாக இப்படி நடப்பதை விரும்ப மாட்டார்கள். பிக்பஜாரில் நீங்கள் எடுக்கும் உடையை அதேபோல இன்னொருவரும் எடுத்து அணிந்தால், நீங்கள் அதை ரசிப்பீர்களா? மேலும் ஒரே கருத்தைக் கொண்டவர்கள்தான் பெரும்பாலும் நண்பர்களாக அமைவார்கள். இதை நீங்கள் தற்செயல் என்கிறீர்களா? அப்படி கூறமுடியாதுதானே. எனவே இதனை சோழி போட்டு பார்க்காமல் நமது வேலையை நாம் பார்ப்பதே நல்லது. நன்றி: சயின்ஸ் ஃபோகஸ்

தற்செயல் என்பதை அறிவியல் ஏற்கிறதா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி தற்செயல் என்பதை நம்புகிறீர்களா? அறிவியல் இதனை விளக்கியுள்ளதா? தற்செயலாக நாம் உருவாக்குவது இதில் சேராது. ஆனால், அரிதாக சில நிகழ்ச்சிகள் அப்படி நிகழ்வது உண்டு. அப்படித்தான் டைட்டானிக் பனிப்பாறையால் உடைந்து நொறுங்குவதை பல ஆண்டுகளுக்கு முன்னரே தி ரெக் ஆப் தி டைட்டன் நாவலில் விவரித்துவிட்டனர். இதில் கப்பலின் பெயர் உட்பட பல விஷயங்கள் ஒற்றுமையாக அமைந்தன. இதனை நிகழ்தகவு தியரிப்படி வேண்டுமானால் விளக்கலாம். கால்பந்து மைதானத்திலுள்ள 23 பேரில் ரெஃப்ரி உட்பட இருவருக்கு ஒரேநாளில் பிறந்த தினம் வர வாய்ப்புள்ளது. அதாவது, 50:50 அளவு. மற்றபடி, அப்படியே முழுக்க அறிவியல் தற்செயல் நிகழ்வுகளை நம்புவதில்லை. ஏனெனில் ரெக் ஆப் தி டைட்டன் என்ற நூல் எழுதி 14 ஆண்டுகளுக்குப் பிறகுதான் டைட்டானிக் கப்பல் கவிழ்ந்து போனது. ஸ்பைடர்மேனுக்கு வயது குறையும்போது அவரது அத்தை என்னவாகுவார் என பஸ்பீடில் யோசித்துப் போட்ட மீம் இது. நன்றி: பிபிசி, பஸ்ஃபீடு