இடுகைகள்

எம்.எஸ். சிறுகதை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பரவசமான வாசிப்பு இன்பத்தை தரும் ஸோரன்டினா எழுதிய சிறுகதை தொகுப்பு - ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை -எம்.எஸ்.

படம்
  ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை - ஃபெர்னான்டோ ஸோரன்டினோ ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை அர்ஜென்டினா எழுத்தாளர் ஸோரன்டினா தமிழில் எம்எஸ் காலச்சுவடு பதிப்பகம் நூலின் பக்கங்களே 77 தான். எளிமையான கதைகள். அனைத்துமே வாசிக்கும்போது புன்னகை வர வைப்பவைதான். சில நன்றாக சிரிக்க வைக்கின்றன. காலச்சுவடின் எம்.எஸ் அனைத்து கதைகளையும் எளிமையாக மொழிபெயர்த்திருக்கிறார். சரளம் என்பதைத் தாண்டி அர்ஜென்டினா எழுத்தாளரின் பகடியையும் நம்மால் அனுபவித்து ரசித்து படிக்க முடிகிறது. 2003இல் வெளியான காலச்சுவடின் முதல் அயல் இலக்கிய நூல் இதுதான். வெறும் சூசகம், ஹார்ன் இசைப்பவர், வருகை ஆகிய கதைகள் ரசித்து படிக்கும்படியானவை. இப்படி கூறுவதால் இவை மட்டுமே சிறப்பானவை என்று கருதிவிடவேண்டாம். எழுத்தாளரின் விசேஷமான பகடி இக்கதைகளில் சிறப்பாக வெளிப்பட்டு இருக்கிறது. வெறும் சூசகம் என்பது சிறிய கதைதான். ஆனால் அதை பயன்படுத்தி ஒரு மனிதர் தன்னை மட்டும் காப்பாற்றிக்கொள்ளும் குணத்தை ஸோரன்டினோ எளிமையாக அதேசமயம் தீர்க்கமாக வெளிப்படுத்தியுள்ளார். அற்பத்தனமாக நடந்துகொண்டு வீட்டு உரிமையாளரை தனது சமையலறையில் நீர் எடுத்து