இடுகைகள்

ராகுல் ஆல்வாரிஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒடிஷா இளைஞர்களை முன்னுக்கு கொண்டு வந்த மனிதர்! - முருகானந்தத்திற்கு எழுதிய கடிதங்கள்

படம்
  சுப்ரதோ பக்சி - கோ கிஸ் தி வேர்ல்ட் நூல் 16.1.2022   அன்புள்ள நண்பர் இரா.முருகானந்தத்திற்கு, வணக்கம். நலமாக உள்ளீர்களா? வீட்டில் உள்ளோரின் நலனைக் கேட்டதாக சொல்லுங்கள். இம்முறை வீட்டில் இருந்தபடியே வேலை செய்யும் முறை அமலாகி இருக்கிறது. எனவே, அனைத்து நாட்களும் ஆபீஸ் செல்வதில் விருப்பம் இல்லை. சில நாட்களில் வேலையை முடித்துவிட்டு உடனே எங்காவது பயணம் செய்வது என நினைத்துள்ளேன். பார்ப்போம். ‘தெருக்களே பள்ளிக்கூடம் என்ற மொழிபெயர்ப்பு நூலை ஆலிவர் அண்ணாவிடம் இரவல் வாங்கி வந்தேன். அதையும் இனி வாசிக்க வேண்டும். பஸ்சில் திருவண்ணாமலையிலிருந்து சென்னை வரும்போதே, அந்நூலில் 44 பக்கங்களைப் படித்துவிட்டேன். இந்த நூலின் தொடக்க தமிழ்மொழிபெயர்ப்பை நான்தான் செய்தேன். அந்த நூல் இலவச நூலாக ஃப்ரீதமிழ் இபுக்ஸில் உள்ளது. நூலின் மொழிபெயர்ப்புத் தரம் சரியானபடி கைகூடி வரவில்லை. புஷ்பா – தெலுங்குப்படம் பார்த்தேன். கொண்டாட்டமாக உள்ளது. தெலுங்கிலேயே பார்த்தேன். நன்றாக எடுத்திருக்கிறார்கள். வட இந்தியாவில் படத்திற்கு நல்ல வருமானம் உள்ளது. தென்னிந்தியாவில் இப்போது ஓடிடியில் கூட வந்துவிட்டது. ஒடிஷாவில் பணியாற

மழையால் ஏற்படும் மந்தநிலை - கடிதங்கள் - கதிரவன்

படம்
  மழையால் மந்தநிலை ! அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? இன்று அதிகாலை முதல் மழை பெய்துகொண்டே இருக்கிறது . சூரியனைப் பார்க்கவே முடியவில்லை . டீ குடிக்க வெளியே போனால் மழை விடவில்லை . அந்த இடத்திலும் போட்டி போட்டு ர . ரக்கள் அதிமுக ஆபீசுக்கு வந்துவிட்டார்கள் . அவ்வை சண்முகம் சாலை முழுக்க ஆம்புலன்ஸ் நீளத்திற்கு வண்டிகளைக் கொண்டு வந்து நிறுத்திவிட்டனர் . போக்குவரத்து நெரிசலுக்கு வேறு என்ன காரணங்கள் வேண்டும் ? ஸ்கைலேப் என்ற தெலுங்குப்படம் பார்த்தேன் . ஆந்திராவில் உள்ள ஏழைமக்கள் வாழும் ஊர் . அந்த ஊரின்மீது விண்கல் வந்து மோதப்போவதாக செய்தி . அது மக்களை எப்படி பாதிக்கிறது என்பதே படக்கதை . இதனூடே ஜமீன்தார் மகள் கௌரி எப்படி உண்மையான பத்திரிகையாளராகிறாள் , மருத்துவ உரிமம் தடைபட்ட ஆனந்த் எப்படி தனது முதல் கிளினிக்கை கிராமத்தில் தொடங்கி வெல்கிறான் என்பதை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறார்கள் . இன்று ஆபீசில் ஒரு கட்டுரை மட்டுமே எழுதினேன் . மழை பெய்தால் மனம் வேலையில் குவிய மாட்டேன்கிறது . படிக்கவேண்டிய அறிவியல் இதழ்கள் நிறைய உள்ளன . அவற்றையும் இனி படிக்க வேண்டும் . துப்பறியும் சாம்பு - 2 நூலி