இடுகைகள்

ஶ்ரீலீலா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சினிமாவின் திரைக்கதைப்படி, நிஜவாழ்க்கை சம்பவங்கள் நடக்கத் தொடங்கினால்.. எக்ஸ்ட்ரா ஆர்டினரி - வக்கந்தம் வம்சி

படம்
  எக்ஸ்ட்ரா ஆர்டினரி தெலுங்கு நிதின், ஶ்ரீலீலா, ராஜசேகர், சம்பத் சினிமா கதை, ஜூனியர் ஆர்டிஸ்டின் வாழ்க்கையில்  நிஜத்தில் நடக்க ஆரம்பித்தால்.. என்னவாகும்? தெலுங்குப்படங்கள் பார்க்க பிரம்மாண்டவையாக தெரிந்தாலும் அதில் கொண்டாட்ட வஸ்துகளே அதிகம். கதை என்று பார்த்தால் தக்னூண்டு தெரியும். விவேக் ஆத்ரேயா, தருண் பாஸ்கர், கிரிஷ் போன்ற மிகச்சில இயக்குநர்கள்தான் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நாயகத்துவத்தை குறைத்து படம் எடுக்கிறார்கள்.  இந்த படத்தின் இயக்குநர் இதற்கு முன்னர் நா பேரு சூர்யா என்ற தேசியவாத படத்தை எடுத்திருந்தார். அதில், குறைந்தபட்சம் காட்சிகள் கோர்வையாக இருக்கும். கதை என்று பார்த்தாலும் மோசமில்லை என்ற ரகத்தில் இருக்கும். ஆனாலும் படம் ஓடவில்லை. அதை விடுங்கள். ஆனால் நிதின் நடித்துள்ள இந்தப்படம் தெலுங்கு படங்களை ஸ்பூஃப் செய்வது போல ஒரு படமோ என்று கூட தோன்றுகிறது. பாதிக்கும் மேல்தான், அப்படியான படம் கூட இல்லை என்று தெரிகிறது. சினிமாவில் நடிக்கும் ஜூனியர் ஆர்டிஸ்ட். அவனது அப்பா சம்பளத்தில்தான் குடும்பமே ஓடுகிறது.வித்தியாசமான பாத்திரங்களை நடிக்கும் ஆசை நாயகனுக்கு. ஆனால் பெரிதாக வாய்ப்பு க

அண்ணன் பெயரில் தம்பி ஆள்மாறாட்டம் செய்து குழந்தை தொழிலாளர்களைக் காப்பாற்றும் அரிய கதை! ஆதிகேசவா

படம்
  ஆதிகேசவா 2023 தெலுங்கு  வைஷ்னவ் தேஜ், ஶ்ரீலீலா ஒரு  பாசமான அம்மா. வேலைக்கு செல்வதை விரும்பாத மகன். அவனை திட்டும் அரசு வேலையில் உள்ள அப்பா. லூசு ஹீரோயின். கண்ணில் பட்டவர்களை வெட்டிக்கொல்லும் வில்லன் என எழுபது எண்பதுகளில் பார்த்த அதே கதைதான்.  இந்த படத்தில் விசேஷம். மேற்சொன்ன அனைத்தையும் அப்படியே வைத்துக்கொண்டு நடிக்கும் ஆட்களை மட்டும் புதிதாக போட்டிருக்கிறார்கள். அநியாயத்திற்கு ஜோஜூ ஜார்ஜை கூட்டி வந்து வீணடித்திருக்கிறார்கள். நல்ல நடிகர். இறுதிக்காட்சியில் அவரது தலையை அப்படியே வெட்டி தனியாக எடுக்கிறார்கள். உண்மையில் அங்கு வெட்டப்பட்டது அவர் அல்ல. வைஷ்ணவின் படத்தை பார்க்க வந்த நாம்தான்.  படத்திற்கு ஜி வி பிரகாஷ் மட்டும்தான் சற்றே ஆறுதல் அளிக்கிறார். அடிதடி வன்முறையில் அதிக ஆர்வம் காட்டுகிற இயக்குநர். அடிபம்பு, ட்ரில்லர் மெஷின், சுத்தி, கற்களை அள்ளிப்போடும் கருவி, கடப்பாரை என என்னென்னமோ பொருட்களை எல்லாம் வைத்து வில்லனின் ஆட்களை நாயகன் கொன்று போடுகிறார். பார்க்கவே பீதியாகிறது. பூவையும் பொண்ணுகளையும் அவனுக்கு கண்ணுல காட்டுங்கடா ரொம்ப வன்முறையா இருக்கான் என குருஜி திரிவிக்ரம் எழுதிய வசனம்