இடுகைகள்

சித்தா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பௌத்தம்/ சமணத்தை போலச் செய்து சைவம் வென்ற வரலாறு - வைத்தியர் அயோத்திதாசர்/ஸ்டாலின் ராஜாங்கம்

படம்
  வைத்தியர் அயோத்திதாசர் நூல் ஸ்டாலின் ராஜாங்கம் வைத்தியர் அயோத்திதாசர் ஸ்டாலின் ராஜாங்கம் நீலம் ரூ.175                                           தமிழன் என்ற நாளிதழை நடத்தியவர் பண்டிதர் அயோத்திதாசர். இவர், சித்த வைத்தியராக ராயப்பேட்டையில் மருத்துவமனை நடத்தியவர். மருத்துவமனை என்பதை விட வைத்திய சாலை என்று கூறலாம். தனது நாளிதழில் சித்த மருத்துவ சிகிச்சை பற்றியும், உண்ண வேண்டிய பல்வேறு மருந்துகளைப் பற்றியும் எழுதி வந்தார். பௌத்தம்/சமணம் ஆகிய மதங்களிலிருந்து எப்படி சைவம், வைணவம் போலச்செய்தல் முறையில் தன்னை வளர்த்திக்கொண்டது. அதற்கேற்ப திரிக்கப்பட்ட இலக்கியங்கள், பாடல்கள் உருவாக்கப்பட்ட விதத்தை பல்வேறு ஆதாரங்களின்படி நூல் விளக்குகிறது. நூலில் வரும் சிறுவன் ஒருவனுக்கு அயோத்தி தாசர் வைத்தியம் செய்விக்கும் முறை சிறுகதை போல உள்ளது. அந்தளவு நுட்பமான தன்மையில் விளக்கப்படுகிறது. அந்த சிறுவன்தான், வளர்ந்தபிறகு திரு.வி.க என்று அழைக்கப்பட்டவர். நூல் முழுக்க எண்ணெய், பூநீறு எனும் பூமிக்கடியில் உள்ள உப்பு, பத்திய முறைகள் பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் பேசப்படுகிறது. பௌத்தம் எப்படி

வாசனைப் பொருட்களின் வரலாறும் பயன்பாடும் - மஞ்சள், லவங்கப்பட்டை

படம்
  மேற்கத்திய நாடுகள் இந்தியாவுக்கு வந்ததே இங்குள்ள பல்வேறு இயற்கை வளங்களை கொள்ளையடித்து விற்கத்தான். அன்று ஆங்கிலேயர்கள் செய்தனர். இன்று இந்திய தரகர்கள், தொழிலதிபர்கள் வெளிநாட்டு பெரு நிறுவனங்களின் கைக்கூலியாக அதே வேலையை இடைவேளை கூட விடாமல் செய்து வருகின்றனர். அதை விடுங்கள். நாம் இங்கு பேச வந்தது. தெற்காசியாவில் உள்ள வாசனைப் பொருட்கள் பற்றித்தான். கொச்சியை வாசனைப் பொருட்களின் தலைமையகம் என்று கூறுகிறார்கள். அந்தளவு இப்பகுதியில் டச்சுகாரர்கள் ஆட்சி செய்தபோது வாசனைப் பொருட்களின் விற்பனை நடைபெற்றிருக்கிறது. முக்கிய வாசனைப் பொருட்கள் என்னென்ன? இன்றும் செட்டிநாடு ஓட்டல்களில் பயன்படுத்தும் பொருட்கள்தான். நம் குடலில் அழற்சி ஏற்படுத்தும் தன்மை கொண்டவைதான். அவை குறிப்பிட்ட அளவைக் கொண்டவை அல்ல. மற்றபடி மருந்தாக பயன்படுத்தினால் மகத்துவம் கொண்டவைதான்.  மிளகு, ஏலக்காய், கிராம்பு, மஞ்சள் இவைதான்.  தெற்காசிய வாசனைப் பொருட்கள் ஆப்பிரிக்கா, அரபு நாடுகள் ஆகியவற்றுக்கு இந்தோனேஷிய மாலுமிகளால் கொண்டு செல்லப்பட்டன. பதினைந்தாம் நூற்றாண்டில்தான் வாஸ்கோட காமா ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்குமான வணிக வாசலைத் திறந்

விகாரமான தோலும் உடைந்த மனதும்! கடிதங்கள்

படம்
  அன்புள்ள ஆசிரியர் கே.என்.சிவராமன் அவர்களுக்கு,  வணக்கம். நலமாக உள்ளீர்களா? இந்த வார குங்குமத்தை ஈரோட்டில்தான் வாங்கினேன். சக்தி சாரின் ஃபேமில் ட்ரீ தொடரை முன்னதாகவே படித்தேன். சிறப்பாக எழுதி வருகிறார். நாணயம் விகடனில் வேலை பார்த்த அனுபவம் உதவுகிறது என நினைக்கிறேன்.  சென்னை, காலைக்கதிர் நாளிதழில் வேலை பார்த்த வீடியோ பிரிவினரில் ஆறு பேருக்கு கொரோனா வந்துவிட்டது. எங்களுக்கு இன்னும் வீட்டிலேயே பணி செய்யும் ஆணை வரவில்லை. அப்படி கொடுத்தால் அலுவலகத்திற்கு புறநகரிலிருந்து வரும் நேரம் நிறைய மிச்சமாகும். உற்பத்தி திறனும் கூடும். இதில் எங்களது ஆசிரியருக்கு மாற்றுக் கருத்துகள் இருக்கலாம்.  ஒவ்வாமை பிரச்னை இருப்பதால் கொரோனாவிற்கான தடுப்பூசியை நான் போட்டுக்கொள்ள முடியாது. ஊசி தூண்டிவிட்டால் மீண்டும் எனது முழு உடலும் தோல் உரிந்து எரிச்சல் தொடங்கிவிடும். முகமெல்லாம் கொப்புளங்கள் வெடித்து விகாரமாக மாறிவிடும். ஊருக்கு சென்று வந்ததில் அம்மாவுக்கு சித்த மருந்துகளை வாங்கிக் கொடுத்துவிட்டு வந்ததுதான் உருப்படியான விஷயம். மற்றபடி நானும் ரூ.2 ஆயிரத்திற்கு மருந்துகள் வாங்கிக்கொண்டேன். எஸ்கேஎம் மருத்துவமனையில்

மாற்று மருத்துவமுறைகளுக்கு அதிகரிக்கும் மவுசு! சித்த, ஆயுர்வேத, ஹோமியோபதிக்கு திரும்பும் மக்கள்

படம்
            இந்திய அரசு ஆயுஷ் அமைச்சகத்தின் மூலம் அலோபதியை தவிர்த்த பிற மருத்துவ முறைகளை அதிகம் ஊக்குவித்து வருகிறது . இதன் புதிய தாக்கமாக அலோபதி மருத்துவர்களிடம் சித்த ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை கற்று்க்கொள்ளுவது பற்றிய விதிகள் வெளியிடப்பட்டு சர்ச்சை ஏற்படுத்தின . இதை எதிர்த்து அலோபதி மருத்துவர்கள் சங்கம் மிக்சோபதி என்ற பெயரில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தினர் . கோவிட் -19 காலம் மாற்று மருத்துவமுறைகளின் மீது நம்பிக்கை வெளிச்சம் பாய்ச்சியுள்ளது . புல் , பூண்டு என கிண்டல் செய்யப்படும் பாரம்பரிய மருத்துவமுறைகள் நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளித்துள்ளன . சித்த மருத்துவத்தில் கபசுர குடிநீர் முக்கியமான உதாரணம் . பதினைந்து மூலிகைகளை கொண்டு மாத்திரை , சூரணமாக விற்கப்பட்டு வருகிறது . தமிழக அரசு இதனை மாநிலமெங்கும் குடிக்க பரிந்துரை செய்தது . அலோபதியை விட ஹோமியோபதி , சித்த ஆயுர்வேத மருந்துகள் கோவிட் -19 க்கு சிறப்பான பயன்களைத் தந்துள்ளன . புகழ்பெற்ற தெரபி முறைகள் ரெஃப்ளெக்ஸாலஜி உடலின் பல்வேறு ஆற்றல் புள்ளிகளை தடையில்லாமல் இயங்கச்செய்த