இடுகைகள்

பாட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாதுகாப்பில் மேம்படத்தொடங்கும் கேப்சா - புதிய மேம்பாடுகள் பற்றிய பார்வை

படம்
  கேப்சா என்பதை இணையத்தை பயன்படுத்துபவர்கள் உறுதியாக எதிர்கொண்டிருப்பார்கள். எழுத்துகளை, பாடல்களை தரவிறக்கும்போது திடீரென கேப்சா தோன்றும். சிறியதும் பெரியதுமான எழுத்துகள் வளைந்து இருக்கும். அதை சரியாக பதிவிட்டால் தரவிறக்கம் நடக்கும். இல்லையெனில் காரியம் கைகூடாது. எழுத்து, படம் என கேப்சா பல்வேறு வகையாக உள்ளது. இப்போது ஒலியைக் கூட கேப்சாவாக வைக்கத் தொடங்கிவிட்டனர். ஒலியைக் கேட்டுவிட்டு அதன் ஒற்றுமையை பதிவிடவேண்டும்.  கேப்சா எதற்காக, வலைதளத்தில் தகவல்களை ஹேக்கர்கள் திருடாமல் இருக்கத்தான். வலைதளத்தில் சிலர் கோடிங்குகளை பயன்படுத்தி, அதை தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. இதை தடுக்கவே கேப்சா பயன்படுகிறது. கூகுள் ரீகேப்சா என்ற வசதியை வழங்குகிறது. இதில் ஒருவர் தனது வலைதளத்தை பதிவு செய்து உண்மையான பயனர் பற்றிய தகவல்களை அறியலாம். வலைதளத்தில் அதிகரிக்கும் போக்குவரத்து உண்மையானதா இல்லையா என ஆராய்ந்து கண்டுபிடிக்க கூகுள் உதவுகிறது. இன்று ஒருவர் தகவல்களை பாதுகாக்க இணையத்தில் உள்ள பாட்கள், அல்காரிகம், செயற்கை நுண்ணறிவோடு மோதவேண்டியுள்ளது.  கம்ப்ளீட்லி ஆட்டோமேட்டட் பப்ளிக் டூரிங் டெஸ்ட் டு டெல் கம்ப்யூட்

உலகை மெல்ல வளைக்கும் செயற்கை நுண்ணறிவு! - கோவிட் -19 ஏற்படுத்திய மாற்றம்

படம்
              கொரோனா தொடங்கிய ஏ . ஐ புரட்சி ! தானியங்கி எந்திரங்கள் முன்னர் தொழி்ற்சாலைகளில் இயக்கப்பட்டாலும் , அதன் பரவலை கோவிட் -19 காலம் வேகப்படுத்தியுள்ளது . பல்வேறு நாடுகளில் நோய்த்தொற்றுக்கான தளர்வுகளில் வணிக வளாகங்கள் மெல்ல திறக்கப்பட்டு வருகி்ன்றன . சிங்கப்பூரில் தூய்மை செய்யும் பணிகளுக்கு கூட புற ஊதாக்கதிர்களைக் கொண்ட எந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன . ஹோட்டல்களில் அறை எடுத்து தங்குவது கூட நேரடி தொடர்புகளை தவிர்த்து , முழுக்க செயலி வசம் அனைத்து செயல்பாடுகளும் வந்துவிட்டன . உணவு , மருத்துவ சேவைகளுக்கும் கூட பாட் வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன . ’’ பெருந்தொற்று காலம் , சுகாதாரமாக வாழவும் , மனிதர்களை நேரடித்தொடர்பு இல்லாமல் சமூக இடைவெளியோடு பல்வேறு விஷயங்களையும் செய்ய வைத்துவிட்டது . செயற்கை நுண்ணறிவின் வேகமான பரவல் நமக்கு நன்மையும் கூடத்தான்’’ என்கிறார் தெற்கு கரோலினா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரிச்சர்ட் பாக் . நான்காவது தொழிற்புரட்சியின் பாகங்களாக செயற்கை நுண்ணறிவை கூறுகின்றனர் . இதன் வருகையால் , வேலையிழப்பு பாதிப்பும் இப்போது