இடுகைகள்

ஒற்றுமை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உங்களை தலைவராக்கும் விதிகளைக் கொண்ட நூல்!

படம்
  21 இர் ரெப்யூடபிள் லாஸ் ஆஃப் லீடர்ஷிப் ஜான் சி மேக்ஸ்வெல் 336 பக்கம் ஹார்ப்பர் கோலின்ஸ்   தலைமைத்துவத்தை ஒருவர் எப்படி வளர்த்துக்கொள்வது என்பதை ஏராளமான அமெரிக்க நாட்டு உதாரணங்களோடு எழுத்தாளர் எழுதி விளக்கியுள்ளார். பிறரது வாழ்க்கை அனுபவங்களோடு, தான் தேவாலயத்தில் பாதிரியாக பொறுப்பேற்று செயல்பட்டபோது செய்த சரி, தவறு, அதனால் நேர்ந்த விளைவுகள் அனைத்தையும் தான் பேசும் தலைமைத்துவ மையப்பொருளுக்கு இணைத்திருக்கிறார். நூலில் இந்தியாவைப் பற்றி மோசமான விவரிப்புதான் உள்ளது. அதைப்பற்றி பெரிதாக கவலைப்பட ஏதுமில்லை. காந்தி, இந்தியா போன்ற ஒரு தேசத்தில் சுதந்திரம் பெற்றுத்தர எப்படி உழைத்தார், மக்களை தொடர்புகொண்டார் என்பதை சிறப்பாக விளக்கியுள்ளார். ஒரு நிறுவனத்தில் ஊழியர்களின் நம்பிக்கையைப் பெறுவது, எதிர்ப்புகளை வெல்வது, பிறருக்கு உதாரணமாக முன்னே நின்று தடைகளை எதிர்கொள்வது, எதிரிகளை வெல்வது, தொலைநோக்காக யோசிப்பது, நெருக்கடியில் வேகமாக சிந்தித்து செயல்படுவது என ஏராளமான விஷயங்களை உதாரணங்களுடன் மெல்ல விவரித்து எழுதியிருக்கிறார். சில இடங்களில் எழுத்தாளர் தான் நடத்தும் பயிற்சி வகுப்பு உதாரணங்கள

குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்படும் காந்தி- வரிசைப்படுத்தப்படும் அரசியல், அந்தரங்க தவறுகள்

படம்
  காந்தியை இன்று பின்தொடர்பவர்கள் இருவகையாக உள்ளனர் . காந்தியவாதிகளாக நூல்களில் காந்தியைப் பற்றிய கருத்துகளைப் படித்துவிட்டு அவரைப் பின்பற்றுபவர்கள் . அடுத்து , காந்தியின் புனித தன்மை மனதை குற்றவுணர்ச்சிக்கு உள்ளாக்க , அவரை தனிப்பட்ட வாழ்க்கை , அரசியல் என இரண்டிலும் உள்ள தவறுகளை எடுத்து அதனை விமர்சித்து வருபவர்கள் . காந்தியைப் பின்பற்றுபவர்களை விட அவரை விமர்சிப்பவர்களே இன்றும் அவரை உயிரோடு வைத்திருக்கிறார்கள் . இல்லையென்றால் ஒருவர் இறந்து 150 ஆம் ஆண்டுகளாகியும் கூட ஒருவரைப் பற்றி பேசி விவாதித்துக்கொண்டிருக்க முடியுமா ? காந்தி தலித்துகளுக்கு தனி தொகுதிகள் கூடாது என்று கூறியது உண்மை . உண்மையில் அவர் அப்படிக்கூறியது , இந்தியா எதிர்காலத்தில் பிளவுபட்டு போகக்கூடாது என்ற நோக்கில்தான் . காந்தி , அம்பேத்கரின் பேச்சு , எழுத்துகள் மூலமாகவே தலித்துகளின் பிரச்னைகளை ஆழமாக புரிந்துகொண்டார் . கிறிஸ்துவம் , சமணம் , இந்து ஆகிய மதங்களின் நூல்களை காந்தி படித்துள்ளதால் , அவை பற்றிய அறிவு காந்திக்கு உண்டு . அம்பேத்கர் , அதிகாரங்கள் மத்திய அரசிடம் இருக்கவேண்டுமென விரும்பினார் . அரசு அதிகாரம் மூலம் சாதி இழிவ

மனிதர்களுக்கும் விலங்களுக்கும் எலும்பு அமைப்புகள் மாறுபடுமா?

படம்
மிஸ்டர் ரோனி மனிதர்களின் எலும்பும், விலங்குகளின் எலும்பும் ஒன்றுதானா? பொதுவாக உயிரினங்கள் அனைத்தும் பொது மூதாதையரிலிருந்து கிளைபிரிந்து வந்தவைதான். இதில் பாலூட்டியான மனிதர்கள் விதிவிலக்கானவர்கள் கிடையாது. விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் ஆன எலும்பு அமைப்பு, ஒன்றுபோலத்தான். செயல்பாடு, உருவாக்கம் என அனைத்தும் ஒரேமாதிரிதான். ஆனால் அதன் அடர்த்தி, அதிலுள்ள சத்துகள் என பார்க்கும்போது நிறைய வித்தியாசங்கள் உண்டு. மருத்துவர் அல்லாதவர்கள் கரடியின் கைகளைப் பார்த்தால் அப்படியே மனிதனுடையதைப் போலவே இருக்கிறது என குழம்புவார்கள். இது பலமுறை நடந்திருக்கிறது. விலங்கு, மனிதர்கள் என இரு உயிரினங்களுக்கான வேறுபாடுகள் மிக குறைவானவை. நன்றி - பிபிசி

பகிர்வதில் யார் பெஸ்ட் நாயா? ஓநாயா?

படம்
ஓநாய் வில்லனாக நினைக்காதீர்கள். நாய்க்கு மூதாதையர்தான் அவை. நாய்களை நாம் நம் வீட்டு விலங்காக மாற்றி முதலில் வாசலில் நின்ற நாயை இன்று பெட்ரூம், சோபா செட்டில் படுக்க வைத்து கொஞ்சிக் கொண்டிருக்கிறோம். மனிதர்களிடமிருந்து அவர்களின் குணங்களுக்கேற்ப சமாளித்து வாழ்வதில் பறவைகளில் காக்கை பெஸ்ட், என்றால் விலங்குகளில் நாய்தான் சிறந்தது. அதேசமயம் உணவைப் பகிர்வது, உணர்வுகளை புரிந்து நடந்துகொள்வது ஆகியவற்றில் சாமர்த்தியசாலி. திருடன் மணியன்பிள்ளை நூலில் கொள்ளையடிக்க செல்லும் வீட்டில் இரண்டு வெளிநாட்டு நாய்கள் காவலுக்கு நிற்கின்றன. அதற்கு அயிரைமீன் ஆசை காட்டியதும் கடமையை ஐந்து நிமிடங்களுக்கு மறந்துபோகிறது. திருட்டு போனபின்பு ஓனர் அதனைச் சொல்லி கிண்டல் செய்ய இரு நாய்களும் உணவு உண்ணாமல் இருந்து செத்து போகின்றன என்ற செய்தி எனக்கு பதற்றம் தந்தது. திருட்டு கொடுத்தவரின் உணர்வை நாய் புரியாமல் இருக்குமா? சொல்லுங்கள். வியன்னாவிலுள்ள அறிவியல் மையத்தில் இதுகுறித்த சோதனை ஒன்றை செய்தனர். ஆறு நாய்கள், ஒன்பது ஓநாய்கள் அங்கு வளர்க்கப்பட்டு வருகின்றன. திரையில் தெரியும் உணவுகளை தொட்டு ஓநாய்கள் அதனை பி