பகிர்வதில் யார் பெஸ்ட் நாயா? ஓநாயா?



© Rachel Dale




ஓநாய் வில்லனாக நினைக்காதீர்கள். நாய்க்கு மூதாதையர்தான் அவை.

நாய்களை நாம் நம் வீட்டு விலங்காக மாற்றி முதலில் வாசலில் நின்ற நாயை இன்று பெட்ரூம், சோபா செட்டில் படுக்க வைத்து கொஞ்சிக் கொண்டிருக்கிறோம்.

மனிதர்களிடமிருந்து அவர்களின் குணங்களுக்கேற்ப சமாளித்து வாழ்வதில் பறவைகளில் காக்கை பெஸ்ட், என்றால் விலங்குகளில் நாய்தான் சிறந்தது. அதேசமயம் உணவைப் பகிர்வது, உணர்வுகளை புரிந்து நடந்துகொள்வது ஆகியவற்றில் சாமர்த்தியசாலி.

திருடன் மணியன்பிள்ளை நூலில் கொள்ளையடிக்க செல்லும் வீட்டில் இரண்டு வெளிநாட்டு நாய்கள் காவலுக்கு நிற்கின்றன. அதற்கு அயிரைமீன் ஆசை காட்டியதும் கடமையை ஐந்து நிமிடங்களுக்கு மறந்துபோகிறது. திருட்டு போனபின்பு ஓனர் அதனைச் சொல்லி கிண்டல் செய்ய இரு நாய்களும் உணவு உண்ணாமல் இருந்து செத்து போகின்றன என்ற செய்தி எனக்கு பதற்றம் தந்தது. திருட்டு கொடுத்தவரின் உணர்வை நாய் புரியாமல் இருக்குமா? சொல்லுங்கள்.


வியன்னாவிலுள்ள அறிவியல் மையத்தில் இதுகுறித்த சோதனை ஒன்றை செய்தனர். ஆறு நாய்கள், ஒன்பது ஓநாய்கள் அங்கு வளர்க்கப்பட்டு வருகின்றன. திரையில் தெரியும் உணவுகளை தொட்டு ஓநாய்கள் அதனை பிறருக்கு அதாவது தம் குழுவினருக்கு பகிர்ந்தன. ஆனால் நாய்கள் இதில் தமக்கானதாகவே இரையைப் பார்த்தன. இன்னும் அது குழு உணர்வில் பின்தங்கியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

ஓநாய்களில் காடுகளில் உயிர்பிழைப்பதற்கு கூட்டு வேட்டை, காவல் ஆகியவையே காரணம். நாய் இதனை தனியாக செய்கிறது. ஒரு நாயின் எல்லையில் இன்னொரு நாய் வருவதில்லை.


நன்றி: பிபிசி