செய்தி ஜாம்!


Image result for news




செய்தி ஜாம்!

ஆஹா!

ராணுவப்பள்ளி சாதனை!

ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவம் நடத்தும் பள்ளி தேர்ச்சியில் சாதனை செய்துள்ளது. அண்மையில் வெளியான 10ஆம் வகுப்பு தேர்வில், இப்பள்ளி மாணவர்கள் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். ராணுவம், அங்கு 43 பள்ளிகளை நடத்திவருகிறது.
அசத்தல்!

குப்பை லட்சியம்

நேபாள அரசு, ராணுவப் படைகளின் உதவியுடன் எவரெஸ்ட் சிகரத்தைத் தூய்மைப்படுத்தத் தொடங்கியுள்ளது. ஏப்ரல் 14 தொடங்கிய இப்பணியில் 5 ஆயிரம் கி.கி. கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. 45 நாட்களில் 10 ஆயிரம் கி.கி கழிவுகளை அகற்றுவதே இத்திட்ட நோக்கம்.

எச்சரிக்கை!

பெங்குவின்கள் இனப்பெருக்கத்திற்கு இடமின்றி அழிந்து வருவது, பிரிட்டிஷ் அன்டார்டிக் ஆய்வு (BAS) மூலம் தெரியவந்துள்ளது. 2016 ஆம் ஆண்டு வெப்பமயத்தால், வெடல் கடல் பகுதியருகே உள்ள ஹாலே பே காலனி எனும் பெங்குவின்களின் வாழிடம் சிதைந்தது. இதில் 10 ஆயிரம் பெங்குவின்கள் இறந்தன.


அச்சச்சோ...

பரவும் அம்மை!

இந்த ஆண்டின் இருமாதங்களில் 42 ஐரோப்பிய நாடுகளில் 34 ஆயிரத்து 300 பேர் அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அல்பேனியா, ரோமானியா, உக்ரைன் ஆகிய நாடுகளில் இந்நோயால் 13 பேர் பலியாகியுள்ளனர். உலக சுகாதார நிறுவனம் அம்மை தடுப்பூசி போட உலக நாடுகளைக் கோரியுள்ளது.

அப்படிப்போடு...

ஜனநாயகக் காவலன்!

மைக்ரோசாஃப்ட் நிறுவனம், தேர்தலில் கள்ள ஓட்டுக்களைத் தடுக்க எலக்சன் கார்டு எனும் மென்பொருளைத் தயாரித்துள்ளது. "இது, கள்ள வாக்குகளைத் தவிர்த்து ஜனநாயகம் காப்பதற்கான முயற்சி" என்கிறார் மைக்ரோசாஃப்ட் நிறுவன இயக்குநர் சத்யா நாதெள்ளா.

நியூஸ் பிட்ஸ்!

நீர்க்கசிவுக்கு முடிவு!

குழாய்களில் ஏற்படும் நீர்க்கசிவைத் தடுக்க ஐஐடி மெட்ராஸ் நிறுவனம், எண்டோபாட் என்ற ரோபோவைத் தயாரித்துள்ளது. எண்டோபாட், 8-15 விட்டம் கொண்ட குழாய்களை லேசர் முறையில் ஆராய்கிறது.

சுற்றுலாவுக்கு வரவேற்பு!

நெதர்லாந்து அரசு, தலைநகரான ஆம்ஸ்டர்டாமை சுற்றுலாவுக்காகப்  பிரபலப்படுத்தியது. இதனால், அந்நகருக்கு வரும்  சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 1.9 கோடியாக எகிறியுள்ளது.

நல்லிணக்க மனிதர்!

அரபு அமீரகத்தைச் சேர்ந்தவர் கிறிஸ்துவர் சாஜி செரியன். கடந்த ஆண்டு முஸ்லிம்களுக்காக சொந்தச் செலவில் மசூதியைக் கட்டினார்.தற்போது அங்கு 800  பேர்களுக்கு ரம்ஜான் நோன்பு உணவுகளை வழங்கிவருகிறார்.


நன்றி: தினமலர் பட்டம்