இடுகைகள்

ஆனந்த விகடன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கோயிலுக்கு போனால் ஆன்மிகவாதி ஆக முடியுமா?

படம்
http://balamurugan1977.tumblr.com மிஸஸ் டக்ளஸ் டிக்டிக்டிக் உன் எண்ணங்கள் குறித்து கவனமாக இரு.  அவை எந்த விநாடியும் வார்த்தைகளாக வெளிவரக்கூடும். விழுங்கள் தப்பில்லை கீழே விழுவதில் அவமானம் ஏதுமில்லை. அருவியைப் பாருங்கள். என்னவொரு குதூகலப் பேரிரைச்சல். கோழியா? முட்டையாழ கோழி முதலில் வந்த தா? அல்லது முட்டை முதலில் வந்ததா? என்னவொரு முட்டாள்தனமான கேள்வி. கோழிதான். முட்டை முதலில் வந்திருந்தால் அதனை யார் அடைகாத்திருக்க முடியும். ஆன்மிகம் கோயிலுக்கு போவதால் ஒருவன் ஆன்மிகவாதி ஆகிவிட முடியாது. வொர்க்ஷாப்புக்கு போவதால் மெக்கானிக் ஆகிவிட முடியுமா? நன்றி: ஆனந்த விகடன்

எதைச்செய்தாலும் நம்பர் 1 ஆக இருக்கவேண்டுமா?

படம்
மிஸஸ் டக்ளஸ் வெற்றியாளன் நண்பர்கள் உள்ள எவனும்  தோற்றுப்போனவன் இல்லை. நம்பிக்கை பிரார்த்தனை உங்கள்  நம்பிக்கைக்கு உயிர் கொடுக்காது. நம்பிக்கைதான் உங்கள் பிரார்த்தனைக்கு உயிர் கொடுக்கும். சிறப்பாக செய் எதைச் செய்தாலும்  அதில் முதலாவதாக இரு. அல்லது சிறப்பாக இரு.  அல்லது புதுமையாகவாவது இரு.  அக்கறை நீங்கள் எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறீர்கள் என்பது குறித்து யாரும் அக்கறைப்பட மாட்டார்கள்.  நீங்கள் எவ்வளவு அக்கறையோடு இருக்கிறீர்கள் என்று தெரிந்துகொள்ளும் வரை.  நன்றி: ஆனந்த விகடன் 30.4.20008

டிக் டிக் டிக் - மிஸஸ் டக்ளஸ்

படம்
pexels.com மிஸஸ். டக்ளஸ் கூடா நட்பு ஆடும் புலியும் ஒன்றாக படுத்து தூங்கலாம். ஆனால் ஆட்டுக்கு தூக்கம் வராது. எதுவுமே.. எதுவும் சுலபமல்ல, ஆனால் எல்லாமே சாத்தியம்தான். ஒலியின் வலிமை ஒன்றைச் சத்தமாக சொல்வதை விட கிசுகிசுப்பாக சொன்னால் மக்கள் நம்பிவிடுகிறார்கள். இரண்டு விதிகள் வாழ்க்கையில் வெற்றி பெற இரண்டே இரண்டு விதிகளைக் கடைப்பிடித்தால் போதும். 1. உங்களுக்குத் தெரிந்ததை எல்லாம் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு இருக்காதீர்கள். 2......................................................................... எது வேண்டும்? கண்ணீர் அனுதாபம் தரும். ஆனால்  வியர்வைதான் பலன் தரும். மோசம் உண்மையைச் சொல்லி ஒருவரை அழ வைப்பது எவ்வளவு மோசமோ, அத்தனை மோசம் பொய்யைச் சொல்லி அவரைச் சிரிக்க வைப்பது. அனுபவ வேலைக்காரன் அனுபவம் உங்களுக்கு கற்றுத்தராது. கதவைத் திறந்துவிடும் பணியாள். நீங்கள்தான் கம்பீரமாக உள்ளே செல்ல வேண்டும். உண்மை எந்த ஒரு சுறுசுறுப்பான விவாதத்தையும் ஒரு சின்ன உண்மையால் முடிவுக்கு கொண்டுவந்துவிட முடியும். உண்டு ஆனால்.. அதிர்ஷ்டம் என்பது உண்டுதான்.