டிக் டிக் டிக் - மிஸஸ் டக்ளஸ்
pexels.com |
மிஸஸ். டக்ளஸ்
கூடா நட்பு
ஆடும் புலியும் ஒன்றாக படுத்து தூங்கலாம். ஆனால்
ஆட்டுக்கு தூக்கம் வராது.
எதுவுமே..
எதுவும் சுலபமல்ல, ஆனால் எல்லாமே சாத்தியம்தான்.
ஒலியின் வலிமை
ஒன்றைச் சத்தமாக சொல்வதை விட கிசுகிசுப்பாக சொன்னால் மக்கள் நம்பிவிடுகிறார்கள்.
இரண்டு விதிகள்
வாழ்க்கையில் வெற்றி பெற இரண்டே இரண்டு விதிகளைக் கடைப்பிடித்தால் போதும்.
1. உங்களுக்குத் தெரிந்ததை எல்லாம் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு இருக்காதீர்கள்.
2.........................................................................
எது வேண்டும்?
கண்ணீர் அனுதாபம் தரும். ஆனால் வியர்வைதான் பலன் தரும்.
மோசம்
உண்மையைச் சொல்லி ஒருவரை அழ வைப்பது எவ்வளவு மோசமோ, அத்தனை மோசம் பொய்யைச் சொல்லி அவரைச் சிரிக்க வைப்பது.
அனுபவ வேலைக்காரன்
அனுபவம் உங்களுக்கு கற்றுத்தராது. கதவைத் திறந்துவிடும் பணியாள். நீங்கள்தான் கம்பீரமாக உள்ளே செல்ல வேண்டும்.
உண்மை
எந்த ஒரு சுறுசுறுப்பான
விவாதத்தையும்
ஒரு சின்ன உண்மையால்
முடிவுக்கு கொண்டுவந்துவிட முடியும்.
உண்டு ஆனால்..
அதிர்ஷ்டம் என்பது உண்டுதான். நாம் எத்தனைக்கெத்தனை
கடுமையாக முயற்சிக்கிறோமோ
அத்தனைக்கத்தனை அதிக எண்ணிக்கையிலான
அதிர்ஷ்டங்கள் நம்மைத் தேடி வரும்.
கடமையைச் செய்
உங்களுக்கு விருப்பமில்லாத வேலையை தினமும் செய்யுங்கள். உங்கள் கடமையை வேதனையின்றி செய்ய உதவும்.
டைரக்டர்
உன்னை கோபப்படுத்துகிறவன்
உன்னை இயக்குகிறான்
உஷார்
இழப்பு
ஒன்றை இழந்தால்தான் ஒன்றை பெறமுடியும். யெஸ் முட்டை உடைந்தால்தான் ஆம்லெட்.
குழந்தைக்கு பாடம்
ஒரு தந்தை தன் குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டிய முக்கியமான பாடம், அவர்களின் தாயை நேசிப்பதுதான்.
குறிக்கோள் நீ செய்ய வேண்டியதை தீர்மானிக்கிறது. ஆனால் ஆர்வம்தான் அதனை சிறப்பாக்குகிறது.
நன்றி: ஆனந்த விகடன்