வயதாவதால் காலம் வேகமாக கடக்கிறதா? - ரோனியிடம் கேளுங்கள்
SF |
ஏன்?எதற்கு?எப்படி? - மிஸ்டர் ரோனி
காலம் வேகமாக பறப்பதற்கு காரணம் என்ன? நமக்கு வயதாவது வேகமாக நடக்கிறதா?
நம் வாழ்க்கையில் ஆறிலிருந்து அறுபது வரை வாழ்க்கை அனைவருக்கும் ஒரேவித வாய்ப்புகளை வழங்குகிறது. அந்த நேரத்தில் நீங்கள் இஏவில் ஷாப்பிங் செய்து ரமேஷ் போலவே சட்டைகளாக வாங்கிக் குவிப்பதோ, சுரேஷ் போல அத்தனை துணிகளையும் ட்ரையல் பார்ப்பதோ செய்வதால் காலம் நம்மைக் கடந்து செல்வது தெரியாமல் போவது.
வாழ்க்கையில் நல்ல விஷயம், நீங்கள் நல்ல விஷயங்களை மற்றவர்களைப் பார்த்து காப்பியடிக்கலாம் என்பதுதான். அதனால் வேலைக்கு இடையே சந்தோஷமாக சாய் கிங்க்ஸில் டீ அடியுங்கள். கிறிஸ்துவ நண்பர்கள் வீட்டு விசேஷமா தாராளமாக ஒயினைக் கேட்டு வாங்க குடித்து ஜீசஸூக்கு சியர்ஸ் சொல்லுங்கள். இனிமையான பாடல்களைக் கேளுங்கள். இதெல்லாம் செய்யும் போதும் காலம் கடந்துதான் செல்லும். ஆனால் நாம் அந்த நேரத்தில் நல் அனுபவங்களை அனுபவித்திருக்கிறோமே அதுதான் இந்த வாழ்க்கையில் லாபம்.