காணாமல் போன சீன பதிப்பாளர்
மைட்டி கரண்ட் என்ற பதிப்பக நிறுவனத்தைச் சேர்ந்தவரை சிறையிலிருந்து மீட்க ஸ்வீடன் தூதர் முயன்றார். இதன் விளைவாக அவரை சீனா ஸ்வீடனுக்கு திருப்பி அனுப்பி உள்ளது.
காணாமல் போன பதிப்பாளர் குய் மின்காயின் மகள் கொடுத்த புகாரின்படி, சீன அரசு ஸ்வீடன் தூதர் அன்னா லின்ட்ஸ்டெட்டை ஸ்டாக்ஹோமுக்கு திருப்பி அனுப்பி உள்ளது.
தந்தையைப் பார்ப்பதற்கு உதவுவதாக குய் மின்காயின் மகளுக்கு சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளார் அன்னா. சந்திப்பு சீன பணக்காரர் ஒருவருடன் நிகழ்ந்திருக்கிறது. இச்சந்திப்பு குறித்து குய் மின்காயின் மகள் கொடுத்த புகார்தான் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
2030 ஆம் ஆண்டிற்கான தூதர் என்ற பெயரில் சீனாவுக்கு தூதராக வந்தவர் அன்னா. ”லஞ்சம் , துன்புறுத்தல் இவை எதுவும் என் தந்தையை காப்பாற்ற போவதில்லை” என்பவர் இது குறித்து மீடியம் இணையதளத்தில் எழுதியுள்ளார். அதில் இவரை ச் சந்தித்த பணக்காரர் குறித்தும் விவரித்துள்ளார்.
2017 ஆம் ஆண்டு சாலை விபத்து சம்பந்தமாக சீன அரசு குய் மின்காயை கைது செயதது. பின்னர் அவரை சீன அரசு பற்றி வெளிநாடுகளுக்கு தெரிவித்த குற்றத்திற்காக அவரை சிறையில் அடைத்தனர். குய் மின்காய் சீன தலைவர்கள் பற்றி சர்ச்சைக்குரிய பல்வேறு புத்தகங்களை பதிப்பித்துள்ளார்.
நன்றி: சீனா மார்னிங் போஸ்ட்