கார்பன் வரி கட்டுவது மக்களின் கடமை







Image result for Paying for Pollution: Why a Carbon Tax Is Good for America

கார்பன் வரி கட்டவேண்டிய நேரம் இதுவே.


பிரான்சில் கார்பன் வரி காரணமாக நாடு திரண்டு போராடிய போராட்டங்களைப் பார்த்திருப்போம். உண்மையில் அது அவசியமா இல்லையா என்பது அவரவருக்கு கருத்து மாறுபடலாம். ஆனால் அந்த வரி தவிர்க்க முடியாது என்கிறார் கில்பெர்ட் மெல்காஃப்.

பசுமை பொருளாதாரம் என்பது பேச்சளவில் நன்றாக இருந்தாலும் நடைமுறைப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல என உறுதிப்பட பேசுகிறார் பொருளாதார வல்லுநர் கில்பர்ட் மெல்காஃப். பேயிங் ஃபார் பொல்யூசன்: வொய் எ கார்பன் டாக்ஸ் இஸ் குட் ஃபார் அமெரிக்கா என்ற நூலை அண்மையில் எழுதியுள்ளார்.

நீங்கள் இப்போது கரிம எரிபொருட்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த கார்பன் வரியை விதிக்காவிட்டால் பின்னாளில் பெரும் விலையை தரவேண்டி வரும் என எச்சரிக்கிறார் இவர்.

கார்பன் வரி கட்டுவதை எப்படி உங்கள் நூலில் நியாயப்படுத்துகிறீர்கள்?


கரிம எரிபொருட்களை எரிப்பதால் வரும் கார்பன் டை ஆக்சைடு பசுமை இல்ல வாயுக்களை அதிகரிக்கும். மேலும் பருவநிலை மாறுபாடு ஏற்படும்போது, பசுமை இல்ல வாயுக்களின் பாதிப்பு மேலும் அதிகரிக்கும்.

மக்கள் தாங்கள் பயன்படுத்தும் வசதிகளுக்கேற்ப ஏற்படும் பாதிப்புகளுக்கு பொறுப்பேற்பது அவர்களுடைய கடமை. அமெரிக்காவில் ஹார்வி புயலால் கனமழை பெய்து நாடு பாதிக்கப்பட்டதில் கார்பனின் பங்கு கிடையாதா? நாம் இதன் சேதத்தை நம் கண்ணில் படும் அளவில் மட்டும் கணக்கிடுகிறோம். ஆனால் 2016 ஆம் ஆண்டு நியூ இங்கிலாந்தில் திடீரென ஏற்பட்ட வறட்சியால் கிரான்பெர்ரி விவசாயமே அழிந்துபோனது. இதனால் அந்த விவசாயிக்கு பதினைந்து சதவீத நஷ்டம் ஏற்பட்டது.

கார்பன் வரியை எப்படி நியாயப்படுத்துவீர்கள்?

கார்பன் வரி என்பது  கரிம எரிபொருட்களின் விலையை அதிகரிப்பதே. நிலக்கரி, இயற்கை எரிவாயு, பெட்ரோலியம் பொருட்கள் பெருமளவு கார்பன் வெளியீட்டுக்கு காரணம். வெளியிடும் கார்பன் அளவுக்கு ஏற்ப வரியை அதிகரிப்பது அவசியம். நிலக்கரியிலிருந்து வெளிவரும் கார்பன் அளவு பிற பொருட்களிலிருந்து வரும் கார்பன் அளவை விட அதிகம்.

இந்த கார்பன் வரி, குறைந்த கார்பன் வரி கொண்ட பொருட்களை  நாடிச்செல்ல மக்களுக்கு உதவும். காற்று, சூரிய ஆற்றல் பொருட்களை மக்கள் தேர்ந்தெடுக்கவும் வாய்ப்புள்ளது. பிற பசுமை இல்ல வாயுக்களையும் இம்முறையில் வரி வரம்புக்குள் கொண்டு வரலாம்.  இப்போது நாம் பெட்ரோலுக்கும், போக்குவரத்துக்கும் வரிகளை விதித்துள்ளோம்.

உயர்வருமானம் கொண்டவர்களுக்கும் தாக்கம் ஏற்படுத்துகிறது என்பதை அமெரிக்க கருவூலத்துறையினர் கண்டறிந்துள்ளனர். இதனால், இது குறிப்பிட்ட வருமானம் கொண்டவர்களை மட்டும் பாதிப்பதில்லை என்பதை அனைவரும் உணரவேண்டும்.

எவ்வளவு வரி விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது?

ஒரு டன் கார்பனுக்கு 50 டாலர்கள் கார்பன் வரி விதிக்கலாம். இதன் மூலம் பத்தே ஆண்டுகளில் ட்ரில்லியன் டாலர்கள் வரியாக பெறலாம். இது கருவூலத்துறையின் மதிப்பீடு. இதன்மூலம் கிடைக்கும் பணத்தில் வரி தள்ளுபடியும் அளிப்பதை அரசு பின்னாளில் யோசிக்கும். பிறவரிகளைக்கூட குறைத்துக்கொள்ளலாம்.

கார்பன் வரியின் தாக்கங்களாக எதைக் கூறுவீர்கள்?

ஒவ்வொரு வரிக்கும் அதற்கான விலை உண்டு. இப்போது இதனால் மார்க்கெட் சிறிது சரிந்தாலும் அது தற்காலிகமானதே. கார்பன் அளவு குறைவதே வரியின் நோக்கம். லாபம் சம்பாதிப்பது அல்ல என்பதை புரிந்துகொள்ளுங்கள். இப்போதே கார்பன் வரியை விதிக்காவிட்டாலும்(இன்றைய மதிப்பில் 55 ஆயிரம் டாலர்கள்) தனிநபர் வருமானமாக ரூ.80 ஆயிரம் டாலர்களுக்கு மேல் கட்டவேண்டி வரும்.

நன்றி: Phys.org