பாகிஸ்தான் செய்வதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது
scroll.in |
புல்வாமாவில் 43 இந்திய ராணுவ வீரர்கள் தற்கொலைத் தாக்குதலில் பலியாகியுள்ளனர். இதற்கு நாடெங்கும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியா என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றி முன்னாள் வீரர் லியோடெனன்ட் ஜெனரல் டிஎஎஸ் ஹூடா கூறுகிறார்.
ஐஎஸ் தீவிரவாதக்குழு காஷ்மீரில் வளர்ந்து வருகிறதா?
நான் அப்படி யோசிக்கவில்லை. அவர்களிடம் அவ்வளவு வலுவான கட்டமைப்பு கிடையாது. தாக்குதலுக்கு ஜெய்ஸ் இ முகமது, லஷ்கர் இ தாலிபா, ஹிஸ்புல் முஜாகிதின் ஆகிய அமைப்புகளே காரணம். ஐஎஸ் அல்லது அல் கொய்தா தீவிரவாத அமைப்புகள் இத்தாக்குதலில் இருக்கும் என்று என்னால் நினைக்க முடியவில்லை.
கடந்த ஆண்டு காஷ்மீரில் வளர்ந்து வரும் பிரச்னைகளைப் பற்றி எழுதியிருந்தீர்கள். அதனைக் கொஞ்சம் விளக்குங்களேன்.
நீங்கள் இன்னும் காஷ்மீர் பிரச்னையில் கண்களை மூடிக்கொண்டு இருக்க முடியாது. கடந்த சில ஆண்டுகளாக தீவிரவாத இயக்கங்களில் இளைஞர்கள் சேரும் அளவு அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு மட்டுமல்ல, கடந்த ஆண்டும் அதிகளவிலான பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இதை இந்தியா இன்னும் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை. உள்ளே வரும் பிரிவினைவாத பிரச்னைகளை பாகிஸ்தான் சரியாக பயன்படுத்திக் கொண்டது என்றுதான் சொல்லவேண்டும்.
இந்தியா இரண்டாவது சர்ஜிகல் ஸ்ட்ரைக்கிற்கு தயாராகிவிட்டதா?
இதை என்ன நீங்கள் சொன்னாலும் பாகிஸ்தானின் தீவிரவாத அமைப்புகளை முடக்கும் அவசியம் நமக்கு உள்ளது. ஜெய்ஸ் இ முகமது அமைப்பு தாக்குதலை நாங்கள்தான் நடத்தினோம் என பெருமையாக ஒப்புக்கொள்கிறார்கள் என்பதை சும்மா நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
நாம் உடனே போரைத் தொடங்க முடியாது. ஆனால் பாகிஸ்தான் ராணுவத்திற்கு வலி என்றால் என்னவென்று காட்டவேண்டும். பேச்சுவார்த்தை என்ற பெயரில் இன்னும் நாம் பொய்களை பேசிகொண்டிருக்க முடியாது.
நன்றி: தி டைம்ஸ் ஆப் இந்தியா(ரோகித் இ டேவிட்)