லவ் இன்ஃபினிட்டி: கல்யாண ஆசை என்ன தெரியுமா?
pexels.com |
அழகான ரசனை உனக்கு. அதென்ன சந்தனத்தில் அதிகமாக தண்ணீர் சேர்ந்த மாதிரி. உன் ரசனை ரொம்ப அழகு. கவிதைத்தனமா இருக்கு, எனக்கும் Selva அக்காவ பாத்தவுடனே பிடிச்சுப் போச்சு. இப்பல்லாம் Selva வைப் பார்த்தால் ரொம்ப பொறாமையாக இருக்குன்னு கூட சொல்லலாம்.
உன் Dream(marriage) ரொம்ப நல்ல இருக்கு. எல்லா ஆண்களும் சொல்லாட்டியும் பெரும்பாலான Gents இப்படித்தான் நினைச்சுப்பாங்க. ஆனா அப்படி நடந்துக்க மாட்டாங்க. அந்த அளவு Tension ஆகிடுவாங்க. ஆனா நீ சொன்னபடி நடப்பீன்னு நம்புறேன். Anyway Your Future Wife is Very Lucky person. But you and I? நீ இந்த மாதிரின்னு நான் Wife கிட்ட நான் சொல்லிக் கொடுத்திருவேன். இனி நான் எழுதறது Too Much ஆ தெரிஞ்சா தெரிஞ்சுட்டு போவது. உன்கிட்டத்தானே சொல்றேன்.
Marriage Life இல் எனக்கு சில ஆசைகள் உ. எனக்கு கணவராக நல்லவராக இருக்கணும். என் தவறை அன்பா சுட்டிக்காட்டி திருத்தணும். ஒரே Delivery ல இரட்டைக் குழந்தை பெத்துக்கணும். அதுவும் ஒரு பொண்ணு, ஒரு பையன். குழந்தைகள அவங்க ஆசைப்படி வளர்க்கணும்.(loose ன்னு நினைக்காதே Please!)
இவ்வளவு முறை Photo கேட்டும் போட்டோ கொடுக்கலைனா உன்மேல் நம்பிக்கையில்லைனு நினைத்து சண்டை போட்டாலும் போடுவாய்!
அடுத்த கடிதம் நாளைக்கு....
லவ் இன்ஃபினிட்டி
குமார் சண்முகம்
தொகுப்பு: அஷ்வத், ருஷ்கர் வித்யா