அரசு பத்திரங்களை அறிவீர்களா?
அரசு பத்திரங்களை அறிவோம்!
இந்திய அரசு வெளியிடும் அரசு பத்திரங்கள் குறித்த விளம்பரங்களை நாளிதழில் பார்த்திருப்பீர்கள். உண்மையில் அரசு பத்திரங்களின் பயன் என்ன? நிறுவனங்கள் வணிகத்தில் எளிதில் ஈடுபடுவதற்காக இந்திய அரசு, பத்திரங்களை வெளியிடுகிறது.
அரசு பத்திரம்
மத்திய மற்றும் மாநில அரசுகள் பத்திரத்தை வெளியிடுகின்றன. முதலில் பெருநிறுவனங்கள் வணிகத்திற்காக இப்பத்திரங்களில் முதலீடு செய்தன. தற்போது சிறு நிறுவனங்களும் இதில் முதலீடு செய்வது அரசின் விதிமுறைகளால் கட்டாயம் ஆகியுள்ளது.
பத்திரத்தின் ஆயுள்
அரசு வெளியிடும் பத்திரத்தின் கடன் பொறுப்புக்கு அரசு பொறுப்பேற்பதால் பயம் தேவையில்லை. இப்பத்திரங்கள் குறைந்தது ஓராண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் கொண்டதாக தேதியிட்டு வெளியிடப்படுகின்றன. இந்திய அரசு இவை தவிர தேசிய சேமிப்பு சான்றிதழ், சேமிப்பு பத்திரம் ஆகியவற்றை வெளியிடுகின்றன. சிறப்பு பத்திரங்களாக எண்ணெய் பத்திரங்கள், சக்தி பத்திரங்கள், உணவுப்பொருள் பத்திரங்கள், உரப்பத்திரங்களும் இவ்வகையில் சேரும். மேற்கூறிய அனைத்து பத்திரங்களையும் வணிகத்திற்கான பத்திரங்களாக கருத முடியாது.
நன்றி: தினமலர் பட்டம்