இடுகைகள்

பவுன்சர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குஸ்திபோடும் கிராம பெண் பப் பவுன்சராகி சாதிக்கும் கதை - பப்ளி பவுன்சர் -மதுர் பண்டார்கர்

படம்
  பப்ளி பவுன்சர் இந்தி இயக்கம் மதுர் பண்டார்கர் தயாரிப்பு ஜங்லீ பிக்சர்ஸ்   டெல்லிக்கு அருகில் உள்ள கிராமத்தில்  நடைபெறும் கதை. அங்குள்ள   கிராமத்தில் குஸ்தி அதாவது மல்யுத்தம் செய்யும் இளைஞர்கள் அதிகம். இவர்கள் டெல்லிக்கு சென்று அங்குள்ள கிளப்பில் பாதுகாவலர்களாக – பவுன்சர்களாக வேலை செய்து சம்பாதிக்கிறார்கள். இரவில் கிளப் பாதுகாப்பு வேலை. பகலில் வீட்டில் வேலை செய்வது உடற்பயிற்சி செய்வது என இருக்கிறார்கள். மல்யுத்தம் சொல்லித் தரும் பயிற்சியாளருக்கு ஒரு மகள் இருக்கிறாள். அவள்தான் பப்ளி. மல்யுத்தம் கற்று அவளும் ஆண்பிள்ளை போல திடமாக வளருகிறாள். படிப்பு வருவதில்லை. பத்தாவது தேர்ச்சி பெறமுடியாமல் நின்று, வீட்டு வேலைகளை செய்து வருகிறாள். இவளுக்கு கணக்கு சொல்லிக்கொடுத்த ஆசிரியை மகன் விராஜைப் பார்த்ததும் காதல் பூக்கிறது. அவனைப் பார்க்கவேண்டுமெனில் டெல்லி செல்லவேண்டும். அதற்கு அவளுக்கு குக்கு என்ற பள்ளிக்கால நண்பன் உதவுகிறான். டெல்லி சென்று நவ நாகரீக இளைஞன் விராஜை கிராமத்து பெண் சந்தித்தாளா, காதலைச் சொன்னாளா என்பதுதான் மீதிக்கதை.   பெண்களுக்கும் கல்வி, பொருளாதார சுதந்திரம் தேவை. வாய