இடுகைகள்

ஊதியம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தென்கொரியாவில் மருத்துவர்கள் போராட்டம்!

படம்
  தென்கொரிய மருத்துவர்கள் போராட்டம் எதற்கு? தென்கொரியாவில் ஒரு மாதத்திற்கும் மேலாக மருத்துவர்களின் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டம் காரணமாக நோயாளிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். அரசு, மருத்துவக்கல்லூரிகளில் கூடுதலாக மாணவர்களை சேர்க்க முயன்று வருகிறது. இதற்கு மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். என்ன காரணம்? வேலை செய்யும் சூழ்நிலை மேம்படவில்லை. ஏற்கெனவே கொடுக்கும் ஊதியம் பற்றாக்குறையாக உள்ளது. இதில் கூடுதலாக மருத்துவர்களை கொண்டு வந்து இதே சூழ்நிலையில் தள்ளினால் அது தவறு என்பதுதான் மருத்துவர்களின் வாதம். சீனியர், ஜூனியர் என அனைத்து மருத்துவர்களும் இப்போது போராட்டத்திற்கு வந்துவிட்டனர்.  சியோலில் உள்ள ஐந்து பெரிய மருத்துவமனைகளில் உள்ள ஜூனியர் மருத்துவர்கள் 39 சதவீதம் பேர் போராட்டத்தில் உட்கார்ந்துவிட்டனர். இதனால், அறுவை சிகிச்சைகள் தள்ளிப்போடப்பட்டு உள்ளன. அவசரசிகிச்சை பிரிவுகளில் உள்ள நோயாளிகளை திரும்ப அனுப்பி வருகின்றனர். அரசு,  இந்த விவகாரத்தில், கிராமப்புறங்களில் மருத்துவர்கள் இல்லை. அவர்களுக்கும் மருத்துவ வசதி கிடைக்கவேண்டும் என்றால் மருத்துவர்களின் எண்ணிக்கை கூடவேண்ட

குடும்பங்களை நெருக்கடிக்குள்ளாக்கி பிரிக்கும் பிரிட்டிஷ் அரசின் விசா கொள்கை!

படம்
  இங்கிலாந்து அரசு, நாட்டில் உள்ள குடிமகன்கள் வெளிநாட்டில் உள்ளவர்களை காதலித்து மணக்க புதிய கட்டுப்பாடு ஒன்றை உருவாகியுள்ளது. இதன்படி, வெளிநாட்டில் உள்ளவர் இங்கிலாந்தில் வந்து குடும்பத்துடன் வாழ வேண்டுமெனில் 48,500 டாலர்கள் வருமானம் தேவை. அப்போதுதான் குடும்ப விசாவை அரசு வழங்கும்.  அரசின் புதிய விதிமுறை காரணமாக வேறு நாட்டினரை காதலித்து மணந்தவர்கள், பிரச்னைக்கு உள்ளாகியுள்ளனர். அரசின் வரம்பிற்குட்பட்ட ஆண்டு வருமானத்தை ஒருவர் பெற்றிருப்பது கடினம். ஆண்டுக்கான தொகை என்று கூறினால் கூட அதை கணவர் அல்லது மனைவி சம்பாதித்து கூடவே குழந்தைகளையும் வளர்ப்பது கடினமான காரியம். அரசின் நெருக்கடி காரணமாக வறுமை நிலையில் உள்ளவர்கள் பலரும் தங்கள் மனைவி அல்லது கணவரை வெளிநாட்டில் தங்கவைக்க வேண்டியுள்ளது. அல்லது பிரிந்திருக்க வேண்டியுள்ளது.  ஒன்றாக இருப்பவர்களும் நிம்மதியாக இருக்க முடியாது. அரசு கூறும் தொகையை கணவன், மனைவி இருவரும் சம்பாதித்தால் மட்டுமே ஒன்றாக சேர்ந்திருக்கவேண்டிய நிலை. இதில், அவர்கள் எப்படி குழந்தை பெற்று வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவித்து வாழ முடியும்? பெரும்பகுதி வாழ்க்கை அலுவலகத்தில் அல்லது

குழந்தை வளர்ப்பில் தன்னை அர்ப்பணித்துக்கொள்ளும் தந்தை! - டாடிஸ் டே கேர் - எடி மர்பி

படம்
                டாடி டே கேர்    Directed by Steve Carr Music by David Newman Cinematography Steven Poster எடிமர்பி நடித்த குழந்தைகளுக்கான படம் . எடி மர்பி அவரது குண்டு நண்பர் பில்லும் விளம்பர நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள் . குழந்தைகளுக்கான உணவுகளை அவர்களை கவரும் விதமாக விளம்பரப்படுத்தவேண்டும் . ஆனால் இதில் அவர்களால் வெற்றி பெறமுடியாமல் சொதப்ப , வேலை பறிபோகிறது . வேறு வேலை தேட முயல்கிறார் . அதுவரைக்கும் வீட்டு செலவுகளை எப்படி சமாளிப்பது ? வழக்குரைஞராக இருக்கும் மனைவிதான் இப்போதைக்கு வருமான ஆதாரம் . அதுவரை சேமிப்பில் இருந்த பணத்தை எடுத்து செலவு செய்து வேலை தேடுவதோடு , குழந்தையையும் பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது . இதே நிலைதான் அவரது நண்பராக பில்லுக்கும் கூட ஏற்படுகிறது . இந்த நேரத்தில் குழந்தைகளை பிளே ஸ்கூலில் சேர்க்க அலைந்து துக்கப்பட்ட நினைவும் அதற்கான கட்டணமும் எடி மர்பிக்கு நினைவுக்கு வருகிறது . அவர் தனது நண்பர் பில்லுடன் ஆலோசித்து நாம் டே கேர் ஒன்றைத் தொடங்குவோம் . தற்காலிகமாகத்தான் . இதை வைத்து குழந்தைகளையும் பார்த்துக்கொள்ளலாம் என சொல்லுகிறார் . இதன் வ

2020 இல் விரும்பப்படும் புதிய வேலை வாய்ப்புகள்!

படம்
giphy 2019இல் உற்பத்தி துறை சரிவைச் சந்தித்தது. சேவைத்துறை வளர்ச்சி பெற்றது. இதன் விளைவாக, வேலைவாய்ப்புகள் இல்லாத பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டது. பின்னர், உள்நாட்டு உற்பத்தி குறைந்து பங்குச்சந்தை வீழ்ந்து நாடு 1960 காலகட்ட இந்தியாவாக மாறியது. அதற்கு பல்வேறு சமாதானங்கள் மனதின் குரல் தொடங்கி பேசினாலும் இந்து ராஷ்டிர பணிகள் காரணமாக தொழில் முதலீடுகள் இந்தியாவுக்கு வரவில்லை. அரசும் பொருளாத வளர்ச்சி தவிர்த்த பிற காரியங்களில் அதிக ஈடுபாடு காட்டியது. தற்போதைய பாஜக அரசு, ஒரு தேர்தலை வென்றவுடன் அடுத்த தேர்தலில் ஜெயிக்க என்ன செய்யலாம் என்று யோசிக்கிறதே தவிர உருப்படியான எந்த திட்டங்களையும் கொண்டு வர நினைக்கவில்லை. உலகளவில் உருவாகும் புதிய வேலைவாய்ப்புகள் பற்றிய பட்டியல் இது. இவை இந்தியாவில் உருவாகுமா என்று கேட்டால் யாமறியேன் பராபரமே... டேட்டா சயின்டிஸ்ட் - இயந்திர வழிக் கற்றல் அது தொடர்பான அப்ளிகேஷன்களை உருவாக்கும் பணி. ஏஐஆப்ஸ் - AIOps தகவல் தொடர்புக்கான செயற்கை நுண்ணறிவு மேம்படுத்தல் தொடர்பான பணிகளை செய்வது. பல்வேறு அமைப்புகளிலுள்ள பிக் டேட்டா விஷயங்களை ஆராய்ந்து பெறுவது. டேவ்ஆ

ஸ்டார்ட்அப் இளைஞர்களின் சூப்பர் சாதனை!

படம்
உலக அரங்கில் சாதிக்கும் இந்தியக் கைத்தறி! செய்தி: நொய்டாவைச் சேர்ந்த கைத்தறித் தொழிலாளர்களுக்கு லால் 10 எனும் ஸ்டார்ட்அப் இளைஞர்கள் உதவி வருகின்றனர். நொய்டாவைச் சேர்ந்த லால்10 எனும் ஸ்டார்ட்அப் தொடங்கப்பட்டு நான்கரை ஆண்டுகள் ஆகின்றன. தற்போது இந்த ஸ்டார்ட்அப் இளைஞர்கள், கைத்தறித் தொழிலுக்கு உதவி வருகின்றனர். இதற்கு வாட்ஸ்அப் மற்றும் பிக் டேட்டா போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகின்றனர். மனீத் கோகில், சஞ்சித் கோவில், ஆல்பின் ஜோஸ் ஆகியோர்தான் அந்த இளைஞர்கள். 2015 ஆம்ஆண்டு பெங்களூரில் தொடங்கப்பட்ட இந்த தொழில்முயற்சியில் 1500க்கும் மேற்பட்ட கைத்தறித் தொழிலாளர்கள், கலைஞர்கள் இணைந்துள்ளனர். சிஆர்எம் எனும் ஆப்பை மேம்படுத்தி, விற்பனை வலைப்பின்னலை வலுப்படுத்தியுள்ளனர்.  மேலும் தேசிய வடிவமைப்பு கல்லூரி மாணவர்கள்  16 பேர், நடப்பு டிரெண்டுகளைக் கண்காணித்து தகவல் கொடுக்கின்றனர். அதைப்பின்பற்றி உடைகளைக்  கைத்தறித் தொழிலாளர்கள் வடிவமைத்து வருகின்றனர். ”தற்போது எங்களுக்கு மாதம் 3 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் ஆர்டர்கள் வந்துகொண்டிருக்கின்றன” என்கிறார் லால் 10 நிறுவனர்களில் ஒருவரான சஞ