இடுகைகள்

இந்திய லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

யுனிலீவரை பீதியடையச் செய்த மாமா எர்த் நிறுவனம் ! - ஃபார்ச்சூன் 40/40

படம்
  நடிகை ஷில்பா, நிறுவனர்கள் வருண், கசல், மாமாஎர்த் கசல் ஆலாக் 34 வருண் ஆலாக் 38 மாமா எர்த்   குழந்தைகளுக்கான வேதிப்பொருட்கள் இல்லாத அல்லது அளவில் குறைந்த சோப்புகளை, ஷாம்பூகளை தயாரிப்பதும், சந்தைபடுத்தி வெற்றி பெறுவதும் கடினம். மாமாஎர்த் நிறுவனம், இந்த விஷயத்தில்தான் மகத்தான வெற்றி பெற்று யுனிலீவர் போன்ற பன்னாட்டு நிறுவனத்திற்கே போட்டியாக மாறியுள்ளது. கடந்த ஆண்டில்தான், டவ் பிராண்டில் குழந்தைகளுக்கான சோப்புகள், ஷாம்புகள் அறிமுகமாகி உள்ளன. இந்த பிராண்ட், பல்வேறு உள்நாட்டு ஸ்டார்ட்அப் நிறுவனங்களோடு போட்டிபோட்டு விளம்பரம் செய்து வருகிறது. குறிப்பாக, மாமாஎர்த். யுனலீவரின் முதலீட்டாளர் ஒருவர், நிறுவனத்திடம் மாமாஎர்த்தோடு போட்டியிட்டு வெல்ல திட்டங்கள் இருக்கிறதா என வெளிப்படையாகவே கேட்டிருக்கிறார். இத்தனைக்கும் மாமாஎர்த் நிறுவனம் தொடங்கி ஏழு ஆண்டுகள்தான் ஆகிறது. 2016ஆம் ஆண்டு ஆறு பொருட்களை விற்றது. இந்த நிறுவனத்தின் பொருட்கள், நாடெங்கும் 50 ஆயிரம் கடைகளில் விற்கப்பட்டு வருகிறது. மொத்த நிறுவன வருவாயில் 35 சதவீதம், மேற்சொன்ன கடைகளிலிருந்து கிடைக்கிறது. ‘’நாங்கள் போட்டியாளர்களைப் பா