இடுகைகள்

சல்மான் குர்ஷித் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒருவர் இந்து என்பதை வன்முறைக்கும்பல்கள் முடிவு செய்கின்றன! - ஷோபா டே, எழுத்தாளர்

படம்
              நான் எப்படிப்பட்ட இந்து என்பதை யார் முடிவு செய்வது ? ஷோபா டே(TOI) இந்தியா சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் நான் என்னை மோசமான நபராக உணர்கிறேன் . அடையாளம் கண்டுள்ளேன் . இந்து என்ற அடையாளம் எனக்கு வழங்கப்பட்டுள்ளது . இந்து பெற்றோருக்கு பிறந்தேன் . இந்து வழியில் வாழ்கிறேன் . இதில் வெற்றி , தோல்வி , தேர்ச்சி , தேர்ச்சி பெறவில்லை என்றெல்லாம் சொல்ல ஏதுமில்லை . கூடுதலான எந்த பலன்களையும் நாம் இந்து என்பதற்காக பெற்றதில்லை . எனக்கு இருக்கும் தகுதிகளின்படி பார்த்தால் இன்றைய இந்தியாவில் நான் மோசமான இந்துவாக தோன்றுகிறது . இன்னும் கூடுதலான திறமைகளை வளர்த்துக்கொண்டால்தான் இந்துவாக இந்தியாவில் வாழமுடியும் போல தோன்றுகிறது . நான் இந்து என்பதைக் காட்ட தனி அடையாளமாக பேட்ஜ் ஏதாவது அணிய வேண்டுமா என்ன ? இப்படி செய்தால் அது பொது இடத்தில் உள்ளாடைகளை எடுத்து வெளியே காட்டுவது போலத்தானே இருக்கும் . இந்து என்பதை வெளிக்காட்டி பிறரை விட அதிக சலுகைகளை பெறுவது தவறானதாக கருதுகிறேன் . இதைக்கூட பலரும் விமர்சித்து சமூக வலைத்தளங்களில் பேசுவார்கள் . இதைப்பற்றியெல்லாம்