கோட்டை மாரியம்மன் கண்நோய் தீர்ப்பாளா? - மாயாதீதம் - என். ஶ்ரீராம்
மாயாதீதம் என். ஶ்ரீராம் தமிழ்வெளி ப.104 இது ஒரு குறுநாவல். இதில் வரும் பாத்திரங்கள் வடகிழக்கு பகுதியில் இருந்து தாராபுரம் வருகிறார்கள். பிறகு அங்கே நடக்கும் என் ஶ்ரீராமின் உலக வழக்கங்கள்தான் கதை. இந்த எழுத்தாளரின் பலமே, அசாம், குவகாத்தி என செல்வதல்ல. தாராபுரம், நல்லிமடம், ஒற்றம் புற்கள், ஊசிப்புற்கள், கிளுவை மர வேலி என மண்ணோடு இணைந்து எழுதுவதுதான். இதுவும் கூட அவருக்கு சிறுவயதில் தெரிந்த வாழ்க்கையாக இருக்கக்கூடும். கதைக்குச் செல்வோம். அசாமைச்சேர்ந்தவர், தன்னுடைய மகனின் கண்நோயைக் குணப்படுத்த முயல்கிறார். நவீன மருத்துவமனைகளுக்குச் செல்கிறார். ஆனால், எதுவும் பயனளிக்கவில்லை. இதனால், அவர் அசாமிலிருந்து புறப்பட்டு தாராபுரத்திற்கு வருகிறார். அங்கு அவரின் தம்பி வாழ்கிறார். அவரிடம் பிள்ளையை ஒப்படைக்கிறார். சித்தப்பா, தனது அண்ணன் மகனை கோட்டை மாரியம்மன் கோவிலில் தங்க வைத்து கண் சிகிச்சையை அளிக்கிறார். ஆனால், அம்மன் மனமிரங்கவில்லை. பல மாதங்கள் இப்படியே கழிகின்றன. அந்த சிறுவனுக்கு கண்ணில் வலி அதிகரிக்கிறது. அந்த சூழலில் தேசாந்திரக்காரன் என்ற பாத்திரம் வந்து வழிகாட்ட, சித்த வைத்தியரின் முகவரி கிடைக்...