இடுகைகள்

செனட் அவை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அமெரிக்கா! - செனட் அவை செயல்பாடு!

படம்
அமெரிக்காவைப் பற்றிப் பேசாமல் எந்த வரலாற்றையும் எழுதிவிட முடியாது. காரணம், பிற நாடுகளை அழுத்தி உருக்குலைத்தேனும் தன்னை தக்கவைத்துக்கொள்ளும் பேராசை சுயநலம் அமெரிக்க அரசுகளுக்கு உண்டு. அதற்கு உலக அமைதி உள்ளிட்ட பல்வேறு பெயர்களை அச்சமயத்திற்கு ஏற்ப சொல்லுவார்கள். அமெரிக்காவின் நாடாளுமன்றத்தை காங்கிரஸ் என்று அழைக்கின்றனர். இதில் செனட் சபை, ஹவுஸ் ஆப் ரெஃப்ரசன்ட்ஸ் என இரு பிரிவுகள் உண்டு. இந்தியாவில் உள்ள மக்களவை, மாநிலங்களவை நினைவுக்கு வருகிறதா அதேதான். அமெரிக்காவின் காங்கிரசில்தான் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு விவாதங்கள் நடைபெறும். செனட் அவை இங்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களுக்கு ஆறு ஆண்டுகள் பதவிக்காலம் உண்டு. இவர்கள் அதிபரின் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் முதற்கொண்டு தேர்ந்தெடுக்கும் அல்லது நிராகரிக்கும்  உரிமை உண்டு. ஒரு மாநிலத்திற்கு இரு செனட் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அமெரிக்காவில் செனட் அவையில் நூறு உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஹவுஸ் ஆப் ரெஃப்ரன்சன்டிவ்ஸ் மொத்தம் 435 உறுப்பினர்கள். பதவிக்காலம் இரண்டே ஆண்டுகள்தான்