உணர்வு ரீதியாக பிறருக்கு அடிமையாக இருப்பது சுதந்திரத்தை தொலைத்துவிடும்!
பிறரின் மகிழ்ச்சிக்குப் பொறுப்பேற்றுக்கொள்ளாதீர்கள்! லின்சிஸ்தான் என்ற நாட்டில் சமூக வலைதளத்திற்கு புதிய விதி நடைமுறைக்கு வந்தது. நீங்கள் பதிவிடும் கருத்தால் யாராவது ஒருவருக்கு மனம் புண்பட்டால் அபராதம், சிறைதண்டனை உண்டு என அரசு கூறியது. உண்மையில் நமது கருத்து அனைவருக்கும் மகிழ்ச்சியை தர முடியுமா, அதற்கு வாய்ப்புள்ளதா? நிச்சயம் இல்லை. முன்னமே கூறியபடி தண்டனையை கூறி, ஒருவரை மிரட்டி வழிக்கு கொண்டு வருவதில் இதுபோன்ற அறிவிப்புகள் வரும். நீங்கள் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர். அதிலேயே, நீங்கள் எடுக்கும் முடிவுகள், கூறும் கருத்துகளுக்கு பலரும் ஆமோதிப்பை வெளிப்படுத்த மாட்டார்கள். எதிர்ப்பார்கள். அப்படி சொல்லக்கூடாது. பேசக்கூடாது என்பார்கள். இந்த லட்சணத்தில் காழ்ப்பும் வெறுப்பும் கொண்ட சமூக வலைத்தளத்தில் பதிவிடும் கருத்துகளுக்கு பூமாலை மட்டுமே கிடைக்குமா என்ன? மாட்டுச்சாணியைக்கூட அள்ளி வீசுவார்கள். அப்படியானால் என்ன செய்வது? விதிக்குட்பட்டு அரசின் விளம்பரம், பிரசார திரைப்படங்கள், அரசு ஆதரவு ஆட்கள் மட்டுமே சமூக வலைத்தளத்தில் இயங்க முடியும் என்பதே விதிகள் மூலம் அரசு மறைமுகமாக கூ...