இடுகைகள்

டேமியன் வில்லியம்ஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களில் பாலின பாகுபாடு உள்ளது!

படம்
  டாமியன் பேட்ரிக் வில்லியம்ஸ் damien p williams நார்த் கரோலினா பல்கலையில் தகவல் அறிவியலாளராக உள்ளார். ஏஐ மனித வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கம் பற்றி ஆய்வு செய்து வருகிறார்.  செயற்கை நுண்ணறிவில் பாகுபாடு உண்டா? ஏஐக்கு நாம் தரும் தகவல்களைப் பொறுத்துதான் அதன் செயல்பாடு அமைகிறது. அதை வெறும் கணித செயல்பாடுகளை செய்யும் தொழில்நுட்பமாக கருதவேண்டாம். அந்த அமைப்பிற்கு பயிற்சி அளிக்கும்போது கொடுக்கும் தகவல்களில் கவனம் செலுத்தவேண்டும். மனிதர்கள்தான் தகவல்களை ஏஐக்கு வழங்குகிறார்கள். எனவே, அவர்களின் மதிப்பீடுகள், பார்வைக்கோணம், பாகுபாடுகளும் அதில் சேர்ந்துவிடுகிறது.  ஏஐ அமைப்பிலுள்ள பாகுபாடுகள் என்னென்ன? செயற்கை நுண்ணறிவுக்கு பொதுவெளியில் உள்ள தகவல்களை கொடுத்து பயிற்சி அளிக்கிறார்கள். இதில் அதிகம் கிடைப்பது கருப்பினத்தவர்களின் புகைப்படங்கள்தான். எனவே, குற்றம், தீவிரவாதம் தொடர்பான பிரச்னைகளில் செயற்கை நுண்ணறிவு கருப்பினத்தவர்களை குற்றவாளி என அடையாளம் காட்டுகிறது. வேலைவாய்ப்புகளில் கருப்பினத்தவர்களின் பெயர்களை ஏஐ தவிர்க்கிறது. தகுதி இருந்தாலும் புறக்கணிக்கிறது. இதில் வேலை தருபவர்களின் இனவெறி மனநிலைய